May 29, 2021

இஸ்லாமிய ஆடையை அரேபியக் கலாச்சாரம் என, எப்படி வாய்க்கூசாமல் கூறுவர்...?


- அஷ்ஷைக் அப்துல்லாஹ் உவைஸ் MA -

 புர்கா அரேபியக் கலாச்சாரமல்ல என்பதற்கு   வரலாறு நெடுகிலும் முஸ்லிம் பெண்கள் கடைபிடித்து வரும் ஆடையே என நிறுவும் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள  ஆதாரங்கள்:

*நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்துக்கு வழங்கிய செயல்முறை விளக்கம்*

ஸூரா அஹ்ஸாபின் 59வது வசனத்தில் இடம்பெறும் ஜில்பாபைத் தம்மீது போட்டுக்கொள்ளட்டும் என்பதற்கு விளக்கம் கூறிய இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் அது இரு கண்கள் அல்லது ஒரு கண்ணைத் தவிர ஏனையவற்றை மறைப்பதாகும் என விளக்கம் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸின் மாணவரான அபீததுஸ் ஸல்மானி ரஹ் அவர்கள் மேற்கூறிய வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது  தனது ஆடையை எடுத்து தனது தலையையும் *ஒரு கண்ணைத் தவிர முகத்தையும் மூடி* செயல்முறையில் செய்துகாட்டினார்கள்.

ஆதார நூல் தப்ஸீர் தபரீ  (20/ 325)

*நபித்தோழிகளின் நடைமுறை*

அஸ்மா பின்த் அபீபக்ர் ரழி அவர்கள், நாம் இஹ்ராமுடைய நிய்யத் வைப்பதற்கு முன்னால் எங்களுடைய தலையை வாரிக்கொள்வோம். எங்களுக்கு முன்னால் ஆண்கள் நடமாடினால் எங்களுடைய *முகத்தை நாம் மூடிக்கொள்வோம்.* எனக் கூறுகின்றார்கள். 

ஆதாரம் இப்னு குஜைமா 2690 ஹாகிம் 1668

*5ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அபூ ஹாமித் அல்கஸாலி மற்றும் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்களும் கூறுகின்றார்கள்:*

முஸ்லிம் பெண்கள் காலாகாலமாக அந்நிய ஆண்களை விட்டும் *முகத்தை மறைக்கும்* வழக்கமுடையோராகவே இருந்து வருகின்றனர். 

ஆதாரம் 

இஹ்யாஉ உலூமித்தீன் 2/ 53 

பத்ஹுல் பாரீ 9/424

*7ம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூ ஹய்யான் ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:* 

பெண் ஒரு கண்ணை மாத்திரம் திறப்பதே ஸ்பெய்னில் உள்ளவர்களின் வழக்கமாக இருந்தது. 

ஆதார நூல்: அல்பஹ்ருல் முஹீத் (8/ 504)

இவ்வாறு அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்ட, தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக பல நாடுகளிலும் பல சமூகங்களிலும் முஸ்லிம் பெண்களால் கடைபிடிக்கப்பட்ட புர்கா, நிகாப் என்ற இஸ்லாமிய ஆடையை வெறும் அரேபியக் கலாச்சாரம் என எவ்வாறுதான் வாய்க்கூசாமல் கூறுகின்றனரோ தெரியவில்லை.

26 கருத்துரைகள்:

في منتصف القرن العشرين، وبينما قضية الحجاب آخذة في التصاعد مع صعود الخطاب الإسلامي الحركي، أصدر الشيخ الألباني كتابه الشهير (حجاب المرأة المسلمة في الكتاب والسنة). وفي بحث نصوصي عميق، واستدلال محكم، وصل الشيخ الألباني إلى أن وجه المرأة ليس بعورة، وأن ستره ليس بواجب إلا على زوجات النبي - صلى الله عليه وسلم -. كما وصل - من ناحية أخرى - إلى أن ستر الوجه ليس ببدعة، أو عادة مستحدثة - كما يقول بعض المؤيدين لكشف الوجه - فقد كانت بعض النساء في عهد النبي - صلى الله عليه وسلم - يفعلنه، اتباعا للأفضل - كما يرى الشيخ الألباني

We need to track down this guy to get more info!

Mr.uwais please stop.still continue with your orthodox way.since 1994 still destroy like you people our Sri Lankan Muslim community.we need Islam not Arabic culture

Sri Lanka not a Muslim country so,we need follow Islam not Arabic culture

இங்கு கருத்திடும் நவீனத்துவ நாதாரிகளுக்கானது. அரேபிய கலாச்சாரம் என்று நீங்கள் ஒதுக்குவதெல்லாம் குரான் சுன்னாவிலுள்ளது. குரான் சுன்னாவை அரபிய கலாச்சாரம் என்றால் நீங்கள் முஸ்லிமாக இருக்க எந்த அடிப்படையும் இல்லை. குரான் சுன்னாவில் பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம் அதை கொண்டு தான் முகத்திரை அணிவாத இல்லையா என்று காண வேண்டுமே தவிர சும்மா மார்க்க அறிவு இல்லாமல் அரேபிய கலாச்சாரம் மசிறு மட்டை என்று துளியளவும் மார்க்க அறிவில்லாத இல்லாத முட்டாள் கதை பேச கூடாது

ஜாமியா நளீமியை இனவாதிகள் தடை செய்ய கூறுகின்றார்கள். உண்மையை கூறப்போனால் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு கூட்டங்களெல்லாம் அதில் பயின்றவர்கள் தான் அதற்காக அதை மூடிவிட்டு பிரச்சினையை முடித்துக்கொள்ளலாமா? கூறுங்கள் நவீனத்துவ ஷைத்தான்களே

@Rizard நீ வேண்டுமென்றால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி எதையாவது ஒன்றை ஏற்றுக்கொள். எதற்கு உம்முடைய அறியாமைக்கும் மார்க்க அறிவில்லாத பின்நவீனத்துவத்திற்கும் முஸ்லீம் சமூகத்தை வழிகெடுகின்றாய் ?

நான் அறிந்தவரை சின்ன வயசுகளில் முஸ்லிம்களை யாரும் அன்னியர்களாக உணர்ந்ததில்லை. செல்வநாயகத்தின் தமிழரசுகட்சி பிரசாரங்களும் சுதந்திரன் பத்திரிகையும்தான் எனக்கு முஸ்லிம் மக்நிராகரித்து கள் பற்றிய கரிசனையை ஊட்டியது. 1980 களில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றது. 1. போர்கோலம் கொண்ட தமிழ் இளைஞர்கள் தமிழரசுக் கட்ச்சியை சார்ந்து நிற்காமல் எதிர்த்து புறம் தள்ளியது. இது வடகிழக்கில் இடம் பெற்றது. 2. அரபிய செல்வாக்கும் பின்பற்றுதலுமாக தீவிரமான முஸ்லிம் இளைஞர்கள் சூபி அமைப்புகளை சார்ந்து நிற்காமல் எதிர்த்து புறம் தள்ளியது.இது உலகம் முழுவதும் இடம்பெற்றது. இதனால் தமிழ் முஸ்லிம் இளைஞர்களிடை ஏற்பட்ட உரசல்கள்தான் அம்பாறை மாவட்டத்தில் 1985 இனக்கலவரமாக கலவரமாக உச்சம் தொட்டது. அப்ப மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் இராணுவ பாதுகாபற்ற தனித்த முஸ்லிம் வட்டாரங்களை தாக்கினார்கள். அதுதான் தமிழ் முஸ்லிம் இளைஞர்களின் இனமோதல்களின் ஆரம்ப கால கட்டம். ஈஸ்ட்டர் தாக்குதலின்பின் கிழக்கில் தமிழ் இளைஞர்கள் பேசும்போது சூபிகளுடந்தான் இன் எங்களுக்கு உறவு என சொன்னார்கள். தமிழர்கள் புர்க்கா போன்ற அரேபிய சாயல் உடைகளை பாரம்பரிய சூபி முஸ்லிம்களது உடைகளாக பார்க்கவில்லை. சிங்களவர் மத்தியில் இந்தப் பார்வையே தீவிரமாக உள்ளது. இதனாக்தான் இத்தகைய பாரம்பரியமற்ற ஆடைகளையும் வஹாபி போன்ற பாரம்படியமற்ற மதப்பிரிவுகளையும் அரேபிய கலாச்சாரமாகவே சிங்களவர்களும் கிழக்கு தமிழர்களும் காண்கிறார்கள். வடக்கில் மன்னா வவுனியாவுக்கு வெளியில் முஸ்லிம்கள் பற்றிய பிரக்ஞை அதிகம் இல்லை என்பது கவலைக்குரியது.

This is not a issue to talk about now. Please stop unnecessary debates on sensitive matters. We have to think about how to protect the people in the country from Corona.

This is not a issue to talk about now. Please stop unnecessary debates on sensitive matters. We have to think about how to protect the people in the country from Corona.

கண்களையும் மூடித்திரிவோர் பற்றி வாய்திறக்க மாட்டீரோ. அதற்கு யாரும் விளக்கம் சொல்ல வில்லையோ? மூட வேண்டும் என்று சொல்வோர் பற்றிக் குறிப்பிடும் நீங்கள் மூடத் தேவையில்லை என்று கூறுவோர் விளக்கத்தையும் சேர்த்திருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும். இங்கு உங்கள் சார்பு விளக்கங்கள் கூறப்படுவதால் இவ்விடயத்திற்கு இன்னொரு பக்க விளக்கம் இருப்பது என்பதனை மறைக்க முடியாது.

He clearly said it's not cultural thing came from Arabs but it's coming from Islamic Shareea..
I don't why these moron culprits didn't get understood the difference .. Allahu Aalam

அஷ்ஷைஹ் அப்துல்லாஹ் உவைஸ் அவர்கள் கூறியுள்ள செய்தியில் அல்லாஹு முகம் மூடும்படி தெளிவாக கட்டளையிட்ட எந்தவொரு குர்ஆன் வசனத்தையோ அல்லது முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவாக கட்டளையிட்ட எந்தவொரு ஹதீஸையும் முன்வைக்கவில்லை.

மாறாக, அந்த காலத்தில் ஸஹாபா பெண்மணிகள் தாம் எவ்வாறு உடை அணிந்தோம் என கூறுகின்ற வரலாற்று பதிவுகளையும், ஹதீஸ் அறிவிப்பாளர்கள் கூறிய அன்றைய பெண்களின் ஆடை கலாச்சாரத்தையுமே ஆதாரமாக பதிகிறார்.

பெண்கள் கட்டாயமாக முகம் மூட வேண்டும் என்ற அல்லாஹுவின் அல்லது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சொற்களை ஆதாரம் காட்டி இந்த செய்தி உறுதிிப் படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Why don't Indonesian women wear Burka?

Burqa is not Arab's culture. But, it is Islam. However, the practice has flexible. So, the situations like we are here, it is better to avoid it in public places and interactive situations with other faith people as long as they are unhappy, and it may lead to misunderstandings among close acquaintances? Allah will reward for our patience IA...

முகத்திரை அவசியமில்லை என்பதற்கு இன்னுமொரு பலமான ஆதாரம்

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் "பெண்கள் இஹ்ராம் நிலையில் முகத்திரை அணிய வேண்டாம்" என்று. இதற்கு நபியவர்கள் "நிகாப்" எனும் அடிப்படைச் சொல்லிலிருந்து வந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். "நிகாப்" என்ற சொல் முகத்திரைக்கு சொல்லும் சொல். மற்ற நேரங்களில் முகத்திரை அணிவது வாஜிப் என்று சொல்பவர்கள் ஜில்பாப் எனும் மேலாடை பற்றிய வசனத்தை முகத்திரை அணிவதற்கு ஆதாரமாக காட்டுவர். இது அப்பட்டமான பிழை. முகத்திரை அணிய வேண்டாம் என்ற ஹதீஸில் "நிகாப்" எனும் சொல்லையே நபியவர்கள் சொல்லி உள்ளார்கள். நிகாப் என்பது முகத்தை மறைக்கும் ஒரு ஆடை, எப்படி தொப்பி, தலைப்பாகை என்பது தலையை மறைக்கும் ஆடையோ அதுபோல நிகாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை. எனவே மற்ற நேரங்களில் முகத்தை மறைக்கணும் என்று சொல்வதற்கு ஒரு இடத்தில்கூட நபியவர்களோ அல்லாஹ்வோ "நிகாப்" அணியுங்கள் என்று கட்டளையிடவில்லை. இவர்கள் அந்த நேரத்தில் மட்டும் ஜில்பாப் வசனத்தை முகம் மூடுவதற்கு ஆதாரமாக காட்டுவார்கள். ஜில்பாப் என்பது உள்ளே அணிந்துள்ள ஆடைக்கு மேலால் அணியும் மேலாடையாகும். முகத்திரைக்கு ஜில்பாப் என்று சொல்வதில்லை, அதற்கு ஹதீஸில் கூறப்பட்ட "நிகாப்" எனும் வார்த்தையே கூறப்படும். எனவே நிகாப் அணியுங்கள் என்று ஒரு கட்டளையைக் கூட அல்லாஹ்வோ, நபி ஸல் அவர்களோ கூறவில்லை.

fb: Ahmed jamaath

Pl open and listen this link for more Details:

https://m.facebook.com/story.php?story_fbid=10219966420854501&id=1341973556

Mr Rizard.. you have the Right to fallow loacal culture...
generally we as Muslims have the Right to fallow islam...
in any country... this is the beauty of islam...
some selfish people don't realize this..out of fear...

When holly qraan n Hadess says anything related worldly issues with human being or what so ever, it's not the matter it is a or not practice of Arabic culture. As Muslim we should follow only qraan n Hadess without satisfying others or obeying to their command by against above both sources of commands. May Almighty Allah guide all the human being his correct party.

Then habaay also traditional dress from arabs 😅😅😅

What he has quoted are from Koran and hadith. If you deny them, then you know who you are in addition to being a coward and munafiq. If you cannot practise, leave it as there's no compulsation in Islam. Dont give fatwas' in things you don't know.

Just because you're in an authorize position, you know that you cannot changed something, which is called earned right/right to enjoy, especially on religious matters. Don't be a coward or Munafiq!

ஹாஜி முஹம்மத் அல்பானி எல்லாம் ஒரு இமாம் அல்ல அவர் ஒரு வழிகேடர் ஹிஜாப் விடயத்தில் பத்வா கொடுப்பதற்கு இஸ்லாம் ஒன்றும் அல்பானியின் மார்கமும் அல்ல அலிஸப்ரி யின் மார்கமும் அல்ல

Could you please let us know with what is theIslamic Culture whch you mean according to Qur'an Saheeh Hadees, pls quote the evidences from Holy Qur'an, and Hadees. Than you brother.

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான விவாதம் அடிப்படையில் அரசியல் புவியியல் பிரச்சினையாகும். ஒரு முஸ்லிம் பெரும்பாண்மை நாட்டில் உள்ள விவாதம் சமயம் சார்ந்தது. முஸ்லிம் சிறுபாண்மை நாடுகளில் பாதுகாப்புதொடர்பான அணுகுமுறைகளை சட்டவிதிகள் தொடர்பானது. இலங்கையில் சமயம் சார்ந்து மட்டும் விவாதிப்பதில் அதிக அர்த்தமில்லை. முஸ்லிம் பிரதேசங்களின் வெளியே முஸ்லிம் பெண்கள் முகம்கொடுக்கும் சட்ட மற்றும் கலாச்சார பிரச்சினைகள் பற்றியும் அவற்றுடன் சமரசம் செய்வது எப்படி என்பதையும் ஆராயுங்கள். ஒரு சமரச முடிவுக்கு வாருங்கள். உங்கள் பொறுப்பின்மை உங்கள் பிள்ளைகளை பதட்டபடுத்துகிறது கோபம் கொள்ள வைக்கிறதுஎன்பதை எப்பவும் ஞாபகத்தில் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

Post a Comment