Header Ads



“திரைச்சீலை நீக்கப்படும் வரையிலும், கீழே எழுதப்பட்டிருந்தது சட்டமா அதிபருக்கு தெரியாது”

“திரைச்சீலை நீக்கப்படும் நேரம் வரையிலும், கீழே எழுதப்பட்டிருந்தது சட்டமா அதிபருக்கு ஏற்கெனவே தெரியாது” என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர்  திணைக்களத்தின் கட்டடத்தில் சீன அரசாங்கத்தால் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட, மின்னணு நூலகம், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரவினால் அண்மையில் திறக்கப்பட்டது. அந்த பெயர்பலகையில் “தமிழ் மொழி” முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையாக மாறியிருந்து. இந்நிலையில், அந்த பெயர்பலைகை உடனடியாக அகற்றிவிட வேண்டுமென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர்களில் ஒருவரும், பிரதமரின் பெருந்தோட்டங்களுக்கான இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டது.

இந்நிலையிலேயே சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Not leaving this matter by replacing the board, But who ever responsible for designing it should be taken in to investigation for this act.

    ReplyDelete
  2. பெரும் தப்பு ல.

    ReplyDelete
  3. எல்லா வற்றிலும் ஏமாற்றம் மட்டும் மீதம்

    ReplyDelete

Powered by Blogger.