Header Ads



காவலர் சையத் அபுதாஹிரின் மனிதாபிமானம்

திருச்சிக்கு அருகில் உள்ள குக் கிராமத்திலிருந்து தனது மனைவியை பிரசவ வலியோடு கொண்டு வருகிறார் ஒரு கிராமவாசி. மருத்துவ மனையில் இவரது மனைவிக்கு பலஹீனமாக உள்ளதால் உடன் ரத்தம் ஏற்ற வேண்டும் என்கிறது நிர்வாகம். லாக் டவுன் என்பதால் மனைவிக்காக ரத்தத்துக்கு அலைகிறார். இவர் அங்கும் இங்கும் அலைவதைப் பார்த்த ஒரு காவலர்  'என்ன பிரச்னை' என்கிறார். தனது பிரச்னையை காவலரிடம் சொல்லவே ''தனக்கும் அதே வகை ரத்தம் தான். நான் தருகிறேன்'' என முன் வருகிறார் காவலர். கர்ப்பிணி மனைவியும் காப்பாற்றப்படுகிறார்.

காவலரின் மகத்தான சேவையை கேள்விப்பட்ட போலீஸ் கமிஷனர் 25000 ரூபாய் அன்பளிப்பு அளிக்கிறார். கர்ப்பிணி மனைவியை கூட்டி வந்தவர் மிகவும் ஏழை என்பதால் அந்த 25000 ரூபாயையும் மருத்துவ மனைக்கு தந்து விடுகிறார் காவலர். அந்த காவலர் பெயர் சையத் அபு தாஹிர்.

3 comments:

  1. சையித் அபூதாஹிர் அவர்களின் தியாகத்துக்கு எங்கள் பணிவான நன்றிகள். உங்கள் சேவையை அல்லாஹ் அங்கீகரித்து அதன் மூலம் அலலாஹ் உங்களுக்கு ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.

    ReplyDelete
  2. This is the human being nice god bless him

    ReplyDelete

Powered by Blogger.