Header Ads



"உரிமைகளை இழந்த பெண்களின் துஆவுக்கும், கண்ணீருக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்"


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்கள் இறுதினங்கள் முன்பு "புர்கா" சம்பந்தமாக தெரிவித்த கருத்து விடயமாக தெளிவினை பெறவேண்டும் என்ற நோக்கில் அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி 48 நிமிடங்கள் பேசினேன்.முதலில் அலி சப்ரி அவர்கள் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்தாரா, அல்லது அவரது கருத்து திரிபுபடுத்தப்பட்டு பத்திரிகைகளில் வெளி ந்துவிட்டதா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. முதலாவதாகவே அந்த சந்தேகம் குறித்து அவரிடம் வினவினேன். அந்த பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தாம் கூறியவைதான் என்று உறுதியாக அவர் தெரிவித்ததையடுத்து நமது உரையாடல் தொடர்ந்தது. எமது சமூகம் ஒருவரை தலைவராக தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவது அபிவிருத்திக்காக மட்டுமல்ல. சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும், உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் தான்!

புதிதாக உரிமைகளை நமது சமூகம் பெற்று பலதசாப்தங்கள் ஆகின்றன. ஆனால், இழந்துகொண்டிருப்பதோ ஏராளம்!ஆனால் திட்டமிட்ட அடிப்படையில் இந்த இனவாத அரசாங்கம் நமது உரிமைகளில் ஒன்றான "புர்கா" வை தடை செய்யப்போகிறோம் என்ற முனைப்போடு, அவ்வப்போது நமது சமூகத்தின் நாடியை பிடித்து பார்ப்பது போன்று செய்திகளை வெளியிடுவதும், சும்மா இருப்பதும் என்று இருக்கையில், நமது புத்தளம் மண் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அவராகவே முன்வந்து புர்கா தடையை ஆதரித்து கருத்தொன்றை வெளியிட்டிருப்பது மிகப்பெரும் ஏமாற்றத்தை தருகிறது.

எமது உரிமைகளை பற்றிய அவரது பார்வை விசாலமற்றது என்பதை அவருடனான உரையாடலின் போது புரிந்துகொள்ளமுடிந்தது. நாடு இருக்கும் சூழலில் புர்காவை பற்றி பெரும்பான்மை சமூகத்திற்கு நல்ல அபிப்பிராயம் இல்லையாம்!இனவாதிகளுக்கு நமது புனித இஸ்லாத்தில் எந்த விடயத்தில் தான் நல்ல அபிப்பிராயம் உண்டு?குர்ஆனில் வன்முறையை தூண்டும் வசனம் இருக்கிறது என்று இனவாதிகள் சொல்லவில்லையா? அதற்காக குர்ஆனை தடை செய்வதா? குர்ஆன் மத்ரஸாக்கள் தம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்கிறார்களே? அதனை மூடிவிடுவதா?

அரபிக்கல்லூரிகள் தீவிரவாத பயிற்சி அளிக்கிறது என்று பொய் சொல்கிறார்களே..! அத்தனையும் இழுத்து மூடுவதா?எத்தனையோ பெரும்பான்மையினர் புர்கா விற்கு ஆதரவாக குரல்கொடுத்துக்கொண்டிருக்கையில் நமது முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரின் நிலையினை எண்ணி கவலைப்பட வேண்டும்!

மார்க்கத்தில் முகத்திரை கட்டாயமில்லாத ஒன்றாம். அதனால் அதனை தவிர்ந்துகொள்வது நல்லது என்கிறார் எமது MP. மேலும் இருவிதமான கருத்துக்கள் உள்ளதென்றும் சொன்னார்.மார்க்கத்தில் ஒரு விடயத்தில் இருவேறு கருத்துக்கள் இருக்கின்ற நிலையில், ஒரு கருத்தை மாத்திரம் தான் எடுத்து பின்பற்றவேண்டும் என்று சொல்லும் அதிகாரம் எவருக்கும் இல்லை.ஒருபெண்ணின் தலையும், கழுத்துப்பகுதியும் மறைக்கப்படவேண்டிய "அவ்ரத் " என்பது ஹிஜாப் அணியக்கூடியவர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு அது தான் மார்க்கம்.

நிகாப் அணியக்கூடியவர்களுக்கு முகமும் சேர்த்து தான் "அவ்ரத்" தாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தாம்! இதுவரைக்கும் அந்நிய ஆடவருக்கு தனது கழுத்தையும் தலையையும் காட்டுவதற்கு ஹிஜாப் அணியும் பெண்கள் எவ்வளவு வெட்கப்படுவார்களோ, அதைக்காட்ட விரும்பமாட்டார்களோ, அதேயளவு தான் முகத்திரை அணியும் பெண்களும் வெட்கித்துப்போவார்கள். ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை முகமும் ஒரு அவ்ரத் ஆகும்! இதுவரை காலமும் அந்நிய ஆண்களுக்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்ட முகம் இனிமேல் வெளிப்படுவதை நினைத்து கவலையடைவாள்.

புர்கா அணிந்து வேறுயாராவது தவறு செய்துவிட்டால் அது நமது சமூகத்தின் மீது பலியாகிவிடும் என்ற அலி சப்ரி அவர்களின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. கவியுடையணிந்து குண்டுவைக்கவில்லையா?சீருடையணிந்து இந்திய பிரதமரை தாக்கவில்லையா?சாரி, சேலைக்குள் குணடை வைத்து வெடிக்கவைக்கவில்லையா?ஹெல்மெட்  அணிந்து தப்பு செய்யவில்லையா? பாடசாலை பையை அணிந்து அதில் குண்டைபொருத்தி வரவில்லையா?

இதுவரை பாதுகாப்பு காரணமாக முகத்திரையை விளக்கி காட்டச்சொன்னால் காட்ட முடியும்! அதே போன்று சேலையையும், சாரியையும் காட்டச்சொல்ல முடியுமா? அதனால் முகத்திரையை விட சேலை சாரி போன்றவை பாதுகாப்பிற்கு மிக ஆபத்தானது என அதை தடை செய்வார்களா?

ஸஹ்ரான் என்ற தீவிரவாதி புர்கா அணிவதற்கு எதிரானவன்! அவனது கொள்கை புர்கா அணிவது கூடாது என்பது. கடந்த ஈஸ்டர் வெடிப்புச்சம்பவத்தில் குண்டுவைத்தவர்கள் யாரும் புர்கா அணியவில்லை. அப்படியிருக்கையில் அந்த புர்கா மாத்திரம் எவ்வகையில் திடீரென பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது என்பது அலி சப்ரிக்கு கூட தெரியாது.பாதுகாப்பின் நிமித்தம் முக அடையாளம் பார்க்க முடியவில்லை என்றால், முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அதைவிட அடையாளம் காணமுடியாத ஒரு விடயமே? அதையேன் தடை செய்யவில்லை?

அலி சப்ரி சொல்கிறார். முஸ்லீம் பெண்களிடம் முகத்தை திறந்து காட்டுங்கள் என்று சொன்னால் பிரச்சினையாம். எங்கே எப்போது குண்டுவெடிக்கும் என்று பயந்த காலத்திலேயே முகத்திரை தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. அதற்கு காரணம் இப்பொழுது இருப்பதுபோன்ற இனவாதிகளும், இனவாதமும் அப்பொழுது இல்லையென்பதே உண்மை!முழு தலைக்கவசம் அணிந்தவர்கள் எப்படி பாதுகாப்பிற்காக திறந்து காட்டுவார்களோ அதேபோன்று முகத்திரை அணியும் பெண்களும் காட்டுவார்கள். அதற்கு மறுத்ததாக இலங்கையில் எந்த சம்பவமும் இல்லை. முகத்திரை போட்டு தீவிரவாதம் செய்த எந்த பதிவும் இலங்கையில் இல்லை.இனவாதிகளுக்கு நம்மீது பழிபோட "புர்கா" மட்டும் தான் உள்ளதா?  

ஒருசமூகத்தின் உரிமையை முறைகேடாக பயன்படுத்தி தப்பு செய்தால், அப்படிப்பட்டவர்களை தேடி பிடியுங்கள்! நீங்கள் இருபதுக்கு ஆதரவளித்த அந்த அரசிடம் அதுபோன்ற திட்டமிட்ட பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். அவர்கள் போடும் ஒவ்வொரு முடிச்சையும் பார்த்து பயந்து புலம்பிக்கொண்டிருக்காமல், அதனை அவிழ்த்தெறிய முயற்சியுங்கள்! 

ஹிஜாப் இருக்கும் பொழுது அதன் பாதுகாப்பு கேடயமாகவே நிகாப் இருக்கின்றது. முழு அடியையும் விமர்சனத்தையும் அது தாங்கிக்கொண்டிருக்கிறது. எப்பொழுது அந்த கேடயத்தை இழப்போமோ அடுத்த இலக்காக ஹிஜாப் உட்பட ஏனைய அடிப்படை உரிமைகளும் நிர்ணயிக்கப்படும் என்ற உண்மையை பாராளுமன்ற உறுப்பினர் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் புரிந்தும் புரியாமலும் விழுங்கிக்கொண்டிருந்தார் என்பதனை உணர முடிந்தது.

மேற்குலகில் நபியவர்களின் அழகிய சுன்னாவான தாடி, தலைப்பாகை போன்றன தீவிரவாத சின்னமாகவும், சினிமாக்களின் மூலமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.கண்ணியமிக்க நபியின் சங்கைக்குரிய மனைவிமார்களின் ஒழுக்கமிக்க ஆடை இனவாதிகளுக்கு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?கண்ணியமிக்க ஸஹாபி பெண்மணிகளின் ஆடையை அவர்களை பின்பற்றும் நமது கண்ணியமிக்க பெண்கள் அணிய தடையா?

நமது முஸ்லீம் தலைவர்களாக இருப்பவர்கள் வெட்கப்படவேண்டும்!"புர்கா பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற சொல்லின் உள் அர்த்தம் என்ன? புர்காவை அணிந்து வந்து குண்டுவைப்பர்கள் அல்லது தீவிரவாத செயலில் ஈடுபடுவார்கள். அதனால் அதனை தடை செய்கிறோம்" என்பதல்லவா?அப்படியென்றால், நபியின் மனைவிமார்கள், ஸஹாபி பெண்மணிகள் அணிந்த முகத்திரை தீவிரவாதிகளின் ஆடை!!! இதுதானே அர்த்தம்? அப்படியென்றால் அந்த ஆடையை அணிந்த நபியின் மனைவிமார்கள், ஸஹாபி பெண்மணிகள் எல்லாம் தீவிரவாதிகளா? (நஊதுபில்லாஹ்)

தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, நிறைய விளக்கங்களும் சொல்லியாயிற்று, எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைபோல, மீண்டும் "இப்போது இருக்கிற சூழ்நிலையில் புர்கா தடை நல்லது தான்" என்றார் பாராளுமன்ற உறுப்பினர்.

ஒரு பெண்ணின் தொழுகையின் போது, வீட்டிற்குள் இருக்கும் பொழுது, கணவன் முன்னால் இருக்கும் பொழுது, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் பொழுது என்று பலநிலைகளில் அவளின் ஆடையமைப்பின் ஒழுங்குகளை இஸ்லாம் வரையறுத்த்துள்ளது என்பதனை கூட அலி சப்ரி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது அவரது பேச்சில் விளங்கியது.

புர்கா தடை வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்! அடுத்தது ஹிஜாபை தடை செய்ய போகிறோம் என்று சொன்னால் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டேன்."அதை எப்படி விடுவோம்.. " அலி சப்ரி அவர்கள்...ஏன் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று கேட்டேன்.."அது அவ்ரத் " என்றார்... அப்படியென்றால் நிகாப் அணிபவர்களுக்கு முகம் ஒரு "அவ்ரத்" தானே? அதை எப்படி விட்டுக்கொடுக்க சொல்வீர்கள்? உரிமையென்றால் பாரபட்சம் பார்க்காமல் தானே கொடுக்கப்படவேண்டும்? நிகாப் அணிபவர்கள் எதனை "அவ்ரத்" என்று மறைக்கிறார்களோ அந்த "அவ்ரத்" தை விட்டுக்கொடுக்க சொல்ல ஒரு முஸ்லிமின் மனம் தான் விரும்புமா?அவரிடமிருந்து அந்த கேள்விக்கு புள்ளியுமில்லை, கமாவுமில்லை...

இறுதியில், உரிமைகளை இழந்த பெண்களின் துஆவுக்கும், கண்ணீருக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற விடயத்தையும் அவரிடம் முன்வைத்தேன்!பதவியாசை, பணத்தின் ஆசை என்று அவரை குற்றம் சொல்ல நான் அதுபற்றி அறிந்தவனல்ல! ஆனால் எம்மை படைத்த இறைவன் நன்கு அறிந்தவன்!பதவியும் பட்டமும் அவன்புறம் இருந்து கிடைப்பவை..அதனை சரியாக பயன்படுத்தாவிட்டால் இம்மை மறுமை இரண்டிலொரு இடத்த்தில் நிச்சயம் பதில்சொல்லியே ஆகவேண்டும்! 

அப்துல் ரஹ்மான் ஹனீபா

5 comments:

  1. நயவஞ்சக முஸ்லிம் அரசியல் எச்சைகளே இந்த புனித ரமலானில் முஸ்லிம்களின் சாபதிற்குள்ளாகி உங்கள் பரம்பரையவே அழித்துவிடாதீர்கள் நீங்கள் பாராளுமன்றம் சென்று இன்று கோடி கோடியாய் சாம்பாதித்துகொண்டு சமுதாயத்தை காட்டிகொடுத்துகொண்டிருப்பது முஸ்லிம்களின் பிச்சையால் என்பதை மறந்துவிடாதீர்கள்

    ReplyDelete
  2. இந்த மாதிரியான களுதைகளை எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டாம் என்று புத்தளம் மக்களிடம் பனிவாக வேண்டுகிறேன் இது வரைக்கும் இருந்தது போல பிரதிநிதித்துவம் இல்லாமலிருந்தாலும் சரியே.

    ReplyDelete
  3. அப்துல் ரஹ்மான் ஹனீபா அவரகள் மிகவும் ஆக்கபூர்வமாகத்தான் விடயத்தை விளக்கி எழுதியுள்ளார்கள். முஸ்லிம்கள் அனைவரும் சிறப்பாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் படித்து ஆனந்தப்பட வேண்டிய விடயம். ரிஷாட் ஹக்கீம் போன்றவர்களுக்கு இத்தகைய பாஃஉறுப்பினரை தேர்வுசெய்து தந்தமைக்கும் மற்றும் புத்தள மாவட்ட முஸ்லிம்கள் இவரைப் போன்ற பாஃஉறுப்பினர்களைத் தேர்வு செய்தமைக்காகவும் அதிக நன்றிகள் சொல்லப்படவேண்டிய விடயம். குறிப்பாக பதவியாசை மற்றும் பணத்தாசை ஆகிய இரண்டும் ஒருவருக்கு வந்துவிட்டால் ------------------ இந்த இடைவெளியினை வாசிப்பவர்கள் தங்களுக்கு விரும்பிய சொற்களை அல்லது வசனங்களை அல்லது பத்திகைகளையிட்டு நிரப்பி படித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. Yes very good article.... some of our brothers who not accept the niqab also must understand that this value of our practices within our community must protected...not by saying obligatory or not or arguing with each other....



    ReplyDelete
  5. Yes very good article.... some of our brothers who not accept the niqab also must understand that this value of our practices within our community must protected...not by saying obligatory or not or arguing with each other....



    ReplyDelete

Powered by Blogger.