Header Ads



பயணத்தடைகளை மீறும் அநாவசிய நடமாட்டங்கள் அதிகரிப்பு - எச்சரிக்கப்பட்டு விடுதலை (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

பயணத்தடைகளை மீறி வீதியில் அநாவசியமாக நடமாடிய 45 க்கும் அதிகமான மக்கள் பொலிஸார் இராணுவத்தினர் தடுத்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அநாவசியமான வெள்ளிக்கிழமை(28) மாலை நடமாடியவர்களாவர். 

 இவர்கள் வீதிகளில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டமை ,முகக்கவசம் சீராக அணியாமை ,சமூக இடைவெளி பேணாமை, உரிய அனுமதி பெறாமல் நடமாடியமை, பள்ளிவாசல் பிரார்த்தனைக்காக சென்றமை(தற்போது பள்ளிவாசல் அனைத்தும் மூடப்பட்டுள்ளது) இவ்வாறான செயலுக்காக பிடிக்கபப்ட்டு தடுத்து வைக்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சுமார் 45 க்கும் அதிகமானவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் சிலர் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் ஏனையோர் பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டதை அவதானிக்க முடிந்தது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸார் பாதுகாப்பு படையினர்இ இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை அடிக்கடி மேற்கொள்ளபப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Not only in Kalmunai, its in entire country. so, it must be avoided to point out some certain areas...?

    ReplyDelete

Powered by Blogger.