Header Ads



கொரோனா நோயாளர்கள் குறித்து, வெளியாகியுள்ள புதிய சுற்றுநிருபம்


வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 - 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் தாமதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பலர் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களை வைத்தியசாலை வார்டுக்களில் தரையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் இருந்து அறிக்கையொன்று கோரப்பட்டிருந்தது. 

அத்துடன் வைத்தியசாலைகளில் இடம் இல்லாவிட்டால் எந்தவொரு நோயாளிகளையும் தரையில் படுக்க வைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வைத்தியசாலை பொறுப்பாளர்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.