Header Ads



மேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்





- Afham Jazeem

தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல என் குடும்பம் சார்பிலுமானது. என்னுடைய  உடன்பிறந்த மூத்த சகோதரர் கடந்த ஒரு வருட காலமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்(TID) கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இன்றி கைது செய்த பின்பு அவருக்கான குற்றத்தை தேடுகின்றார்கள். ஆனால் எந்த ஒரு குற்றமே அவர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் சென்ற வருடம் சரியாக நோன்பு 22ல் அவர்கள் கைது செய்து  சென்றார்கள். சரியாக இன்றும் நோன்பு 22 ஆகின்றது. ஆகவே ஒரு வருடகாலமாக  நானும் என்னுடைய குடும்பமும் இதுவரை காலமும் அவரை பிரிந்து துயரங்கள் துன்பங்கள் கஷ்டங்கள் இன்னும் நிறைய சொல்ல முடியாத அனுபவங்களும் சொல்ல முடியாத வேதனைகளிலும் ஆட்கொண்டேயுள்ளோம். இதேபோல அவரும் (#ahnafjazeem) கடுமையான கஷ்டங்களுக்கும் சுதந்திரமற்றும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவருக்கு  மேசையின் காலிலே கைவிலங்கிடப்பட்டு அவருக்கு நிம்மதியாக தூங்குவதற்கும் அவருடைய அன்றாட அவருடைய  நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தடுப்புக்காவலில் அவருக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லாமல் மிகவும் கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்..எனவே அவருக்காக அடிப்படை உரிமை மீறலுக்கான மனுவை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்திருந்தோம்.  அதன் அடிப்படையில்  இன்ஷா அல்லாஹ் இறைவனுடைய நாட்டப்படி நாளைய தினம் அவர் நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்.அவர் நாளையதினம் ஆஜர்படுத்த படும் போது அவருடைய இந்த தேவையற்ற காரணமற்ற அடிப்படையிலான இந்த கைதியலிருந்து அவர் சுதந்திரமாக விடுதலையாகி மன சங்கடம் இன்றி வீட்டிற்கு வருவதற்கும் அவருடைய உடல் உள ஆரோக்கியத்தில் தேக ஆரோக்கியத்தை இறைவன் கொடுப்பதற்கும் என்னுடைய உடன்பிறவா( இரத்தத்தின் சொந்தங்களென என்னி) சகோதர சகோதரிகளாகிய   நீங்கள் இந்த ரமழான் மாதத்தில் தஹஜ்ஜத் தொழுகை நேரத்திலும்,இப்தாரினுடைய  நேரத்திலும் கியாமுல்லைலிலும் (லைலத்துல் கத்ர்) இவ்வாறான நிறைய சந்தர்ப்பங்களில் உங்களுடைய ஒவ்வொரு தொழுகையின் பின்னும் இருகரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்தித்து கேட்குமாறும், மற்றும் இன்னும் உங்களுக்குத் தகுமானளவு முடியமான ஆதரவையும் மற்றும் என்னுடைய சகோதர மொழி , சகோதர இன,மத, நண்பர்கள்(உரிமையான) அனைவரும் உங்களுடைய முழுமையான ஆதரவையும் உங்களுக்கு இயலுமான வகையிலான அனைத்து விடயங்களையும் இந்த நாளிலோ இனி வரும் காலங்களிலும் கட்டாயமாக செய்து எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் உளம் நெகிழ  உதவிடுமாறு நான் மட்டுமல்ல எனது குடும்பம் சார்பாக  முழுமையாகவும்   தாழ்மையாகவும் நான் இந்த பதிவின் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தயவு செய்து இந்த பதிவை உங்களுடைய உறவினர்களுக்கும் உங்களுடைய நண்பர்களுக்கும் உங்களுடைய சொந்த பந்தங்களுக்கும் பகிர்ந்து எங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிட வழி செய்திடுங்கள்.

எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.

2 comments:

  1. அல்லாஹ் நீதியாளன். அவன் அவனது படைப்புக்களை அவை தாங்கக்கூடிய அளவிற்கே சோதிப்பான். மேலும் அவன் விரும்பக்கூடியவர்களை பல வழிகளில் சோதிப்பான். அல்லாஹ் கருனையாளன். அவனிடம் கையேந்துபவர்களை அவன் ஒரு போதும் வெர்ங்கையுடன் திருப்பி அனுப்பமாட்டான். எனவே எமது பிராத்தனை எமது உறவுகளையும் கட்டாயம் சேர்த்துக் கொள்வோம். பொறுமையாளர்களுக்கு நிச்சயமாக வெற்றி உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.