Header Ads



பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என, பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது - பாதுகாப்பு செயலாளர்


நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட ஊடக அறிக்கை ஒன்றினூடாக பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களூடாக நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பாதுகாப்பு தொடர்பில் நான்காம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. SL Government said same in 2019, when India alerts SL, then what happened on Easter 2019?

    ReplyDelete
  2. அழகா சொல்லி சொல்லி செய்றானுகள். இஷ்ரேல், இந்திய கூட்டணி இப்போது இலங்கையையும் இணைத்துள்ளது.

    ReplyDelete
  3. அமெரிக்காவுடன் எதிராக இவர் தனிநபராக வாதிக்கின்றார். வெற்றி யாருடையது என்பது வாசகர்களின் முடிவாகும்.

    ReplyDelete
  4. Then, why have you Banned recently some Muslim groups on alleged Security considerations and arrested former Jamaat e Islami leader Hajjul Akbar?

    Will you lift the Ban on the Banned Organisations and release the former leader of Jamaat e Islami?

    ReplyDelete

Powered by Blogger.