Header Ads



ஓமானில் இலங்கை உணவுப்பொருள், விற்பனைப் பகுதி திறந்துவைப்பு


ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வத் அவர்களால் இலங்கை உணவுப் பொருட்களுக்கான பிரத்தியேக விற்பனைப் பகுதி ஒன்று மஸ்கட் நகரின் மதீனத் சுல்தான் காபூஸில் அமைந்துள்ள SPAR supermarket ல் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 

SPAR நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சிறிதர் மூசாபேட் மற்றும் இலங்கைத் தூதுவரின் பாரியார் அஸ்மியா அமீர் அஜ்வத் அவர்களும் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். 

20 அடி கொள்கலன் கொண்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முயற்ச்சியால் ஓமானிலுள்ள SPAR Supermarket க்கு அண்மையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இப் பொருட்களே இங்கு பிரத்தியேகமாக காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதற்கான இத்தகைய பிரத்தியேக பகுதி ஒன்று ஓமான் supermarket ல் திறந்து வைக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இத்தகைய பிரத்தியேக விற்பனைப் பகுதிகள் SPAR வின் ஏனைய கிளைகளுgக்கும்h விஸ்தரிக்கப்படவுள்ளதாக தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார். 

[மனாஸ் ஹுசைன்]

No comments

Powered by Blogger.