Header Ads



இலங்கையின் நிலங்களைச் சீனர்களுக்கு வழங்குவதை, பிக்குமார் வேடிக்கைப் பார்க்கின்றனர் - விக்னேஸ்வரன்


-பா.நிரோஸ்

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்க முயற்சிக்கும் பௌத்த பிக்குகள், இந்நாட்டின் நிலங்களைச் சீனர்களுக்கு வழங்குவதை வேடிக்கைப் பார்ப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், எமது நாட்டு அரசாங்கம், சீனாவுக்கு முன்பாக அடிப்பணிவை அனுமதிக்க முடியாதென்றார்.

இதேவேளை, சகோதர இனமான தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தின்படி கிடைக்க வேண்டிய அதிகாரங்களைக்கூட வழங்காதவர்கள், இந்நாட்டின் கடலையும் நிலத்தையும், தூரத்தில் உள்ள சீனர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றார்.

நேற்றைய (19)  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், இச்சட்டமூலத்தை நாளைய (இன்று 20ஆம் திகதி) வாக்கெடுப்புக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளாது, அதனை ஆராய்வதற்கு காலம் வழங்கப்பட வேண்டுமெனவும் இச்சட்டமூலத்தில் சர்ச்சைக்குரிய சரத்துக்கள், இலங்கையில் சீனாவின் கொலனி ஒன்று அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதெனவும் தெரிவித்தார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிற அரசாங்கத்தின் கொள்கை, இன்று எங்குப் போனது, நாடு முழுவதும் சீனச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?” எனவும், விக்னேஸ்வரன் எம்.பி வினவினார்.

3 comments:

  1. உண்மையான கருத்து.

    தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயற்சித்த இலங்கை அரசு தற்போது, சீனாவின் கொடுக்கு பிடியில் சிக்கி சீன அடிமையாகி கொண்டுவருகின்றது. சீனாவின் சுயரூபத்தை அரசு விரைவில் காண்பார்கள். இலங்கையின் இந்த நிலைக்கு மறைமுகமாக தமிழர்களின் பங்கும் உள்ளது.

    மறுபக்கம், இந்திய/US/Uk கூட்டணியின் கோபத்தையும் இலங்கை பெற்று, கடும் Geopolitics சூறாவளி க்குள்ளும் சிக்கிவிட்டது.
    பொருளாதாரமும் பாதாளத்தை நோக்கிபோகின்றது.

    இந்த சூழ்நிலையில், உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் தலைமைகளின் சரியான காய் நகர்த்தலிலேயே தமிழர்களின் எதிரகாலம் உள்ளது.

    ReplyDelete
  2. வடக்கு முஸ்லிம்கள் வசித்து வந்த பூமியை நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து வழிகாட்டி னீர்களே அப்போதே உங்க நீதி அநீதி ஆகிவிட்டது.

    ReplyDelete
  3. வடக்கு முஸ்லிம்கள் வசித்து வந்த பூமியை நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து வழிகாட்டி னீர்களே அப்போதே உங்க நீதி அநீதி ஆகிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.