Header Ads



ஆழ்ந்த அதிருப்தியுடன் இதை எழுதுகிறேன், நம் மக்களின் நடத்தைகளைப் பார்த்து கவலைப்படுகிறேன்...!


நான் ஒரு இறுதி ஆண்டு மருத்துவ மாணவி , ஆழ்ந்த அதிருப்தியுடன் இதை எழுதுகிறேன் , இந்த அசாதாரண நிலையில் நம் மக்களின் நடத்தைகளைப் பார்த்து கவலைப்படுகிறேன். 

தற்போது நான் மகப்பேறியல் வார்டில் எனது final year appointment செய்கிறேன். எங்கள் வார்டுக்குச் செல்லும்போது தினமும் ஒரு கோவிட் வார்டை கடந்து செல்கிறோம். நாம் பெரும்பாலும் covid நோயாளிகள் மற்றும் covid தொற்றினால் இறந்த உடல்களைப் பார்க்கிறோம்.  தினமும் சஞ்சலத்துடனையே எமது நாட்கள் தொடங்குகின்றன. 

 மகப்பேற்றியல் வார்டு என்பது ஒரு மருத்துவமனையின் பரபரப்பான வார்டுகளில் ஒன்றாகும். எந்த நேரத்திலும் ஒரு கர்ப்பிணி தாய் தனது குழந்தையை பிரசவிக்க முடியும். 

இந்த நாட்களில் ஒரு தாய் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் ஒரு தனி அறையில் வைக்கப்படுவார், மேலும் அவர் rapid antigen test ற்கு (RAT) உட்படுத்தப்படுவார். 

சில தாய்மார்கள்  வார்டுக்குள் நுழைந்தவுடன், சில சமயங்களில் வார்டுக்குள் நுழைவதற்கு முன்பே  வரும் வழியில் பிரச்சவிப்பார்கள் . அந்த நேரத்தில் RAT செய்யவோ அல்லது அவர்கள் குறித்த ஒரு குறுகிய வரலாற்றையோ  எடுக்க சில நிமிடங்கள் கூட கிடைப்பதில்லை.

டாக்டர்களும் செவிலியர்களும்  விரைந்து செயற்பட வேண்டியிருக்கும்.அதே நேரத்தில்  தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிந்துகொண்டு, தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய தாய்மார்களுக்கென ஒதுக்கக்கப்பட்டிருக்கும் அறைக்குள் போவார்கள்.கர்ப்பிணித் தாயின் குழந்தையை பிரசவிப்பதற்காக இந்த பதட்டமான நிபந்தனையில் தங்கள் கடமையைச் செய்யும்போது, ​​தனக்கு கோவிட்   தொற்று ஏற்படலாம் என்ற பயம் குறித்து கொஞ்சமும் யோசிக்க அவர்களுக்கு நேரமிருக்காது.அல்லது தங்கள் சொந்த குடும்பத்தின் அபாயத்தைப் பற்றி சிந்திக்கவோ நேரமிருப்பதில்லை. 

கடந்த வாரம் ஒரு தாய்க்கு பிரசவத்தின் பின் சில நிமிடங்களில் , மூச்சுத் திணறல் (shortness of breath -SOB) வேறுவிதமாகக் கூறினால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டாள். PCR செய்து Covid உறுதி செய்யப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக covid  HDU வுக்கு அனுப்பப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவரது கணவருக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. 

பிறந்து ஒரு நாள் கூட முடியாத பச்சிளம் குழந்தையை (Neonate)பெற்றோரிடமிருந்து பிரித்து தனியாக வைத்திருந்தார்கள். குழந்தையைப் பராமரிக்க  உறவினர் ஒருவர் வரும் வரை,  PPE அணிந்த ஒரு மருத்துவச்சி அந்த பிள்ளையுடன் இருக்க வேண்டும். முழு உடலையும் PPE மூலம் மூடி, முகத்தில் mask அதற்கு மேல், ஒரு face sheild !! ...

  இவை அனைத்தையும் அணிந்து கொண்டு, அவள் மணிக்கணக்கில் இருக்க வேண்டியிருந்தது ...

அவளுக்கு ஒரு குடும்பம் இல்லையா? அவளுடைய குழந்தைகளுக்கு ஒரு தாய் வேண்டாமா? அனைவரையும் புறக்கணித்தவளாக அவள் தன் கடமையைச் செய்தாள்.

Warriors 😎 சொல்வார்கள்

"இது தானே அவள் கடமை. செய்யட்டுமே " 

ஒரு simple கேள்வி! அவர் உங்கள் தாய், உங்கள் மனைவி அல்லது உங்கள் மகள் என்றால் நீங்கள் என்ன உணருவீர்கள்? இதையே சொல்வீர்களா? 

நாங்கள் கோவிட் வார்டுகளுக்கு செல்வதில்லை. ஆனால் கோவிட் வார்ட்டில் பணி புரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்? 

உலகெங்கிலும் சுகாதாரப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், சுகாதாரத் துறையுடன் தொடர்பில்லாத மக்கள் தான் அதிகம் தொற்றிற்கு ஆளாகின்றனர். அதே வேளை சுகாதாரப் பணியாளர்கள் தான் இரவும் பகலும் கொரோனாவுடன் மோதுகின்றனர் . 

இது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, உங்கள் சுயத்தை எவ்வாறு பாதுகாக்கிறீர்கள் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. 

டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனைய மருத்துவ மனை ஊழியர்கள் ஒரு நாளில் பாதி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் முழுநேரமும் PPE அணிந்திருப்பார்கள். முகமூடி இல்லாத நிலையில் தூங்கவோ சாப்பிடவோ கூட சுதந்திரம் இல்லாமல் சிறைப்பட்டிருப்பார்கள். 

பொதுமக்கள் என்ன வகை மனநிலையில் இருக்கிறார்கள்?

முகமூடியுடன்  சில மணிநேரம்  இருக்க முடியாது.

social distance பேண   முடியாது.

தங்கள் கைகளை சரியாக கழுவுவதில்லை ? 😞

சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் சொந்த குடும்பத்தினரிடம்,தங்கள் சொந்த வீட்டில் distance பேண வேண்டியிருக்கிறது .தங்கள் குடும்பத்தினருடனான சுவாரஸ்யமான தருணங்களை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது, ​பொது மக்கள்  தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும்  விருந்துகளை நடந்துகிறார்கள். ஒன்று கூடல்கள் நடந்துகிறார்கள்.

ஏன்? தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் கூட பொது இடங்களுக்கு, உறவினர் வீடுகளிற்கு செல்கிறார்கள்?

துரதிர்ஷ்டவசமாக எத்தனையோ பேர் மரணிக்கிறார்கள் . ?! 

இது மனிதனாக நீங்கள் யார்? என்ன செயகிறீர்கள்? என்பதையே பிரதிபலிக்கிறது.இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருங்கள் 

மீண்டும் அதே warriers ¿()

"இது அவர்களின் கடமை தானே , அவர்களுக்கு பெரிய சம்பளம் கிடைக்கும் போது  செய்யத் தானே வேண்டும்?" என்று கூறலாம். 

மீண்டும் அதே கேள்வி!

இந்த வேலையில் உங்கள் கணவன் /மனைவி / பெற்றோர் / குழந்தைகள் அல்லது உடன்பிறப்புகள் இருந்தால் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்களா? 

ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. உங்கள் ஒருவரின் பொடு போக்குத்தனம் பல பேரின் உயிரை பறிக்க இடமளிக்காதீர்கள். 

சலாம் .... இந்த நாட்களில் வார்டில் எனது அனுபவத்தைப் பற்றிய பதிவு இது .. pls read and share

Written by Maryam Safa, FOM - UOK

Translated and decorated by Fauzuna Izzadeen 23/5/21

2 comments:

  1. Very very stupid article what mentioned here.Of course doctor duty that take care pations.This doctor student sister this for new that´s why she little bit worried,We seen our life much wasting also.

    ReplyDelete

Powered by Blogger.