Header Ads



சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணானது


துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ள​தென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றுக்கு பெரும்பான்மை ஆதரவு தேவையாக இருப்பதால், குறித்த விதந்துரைகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா, தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.