Header Ads



திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து


கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அவசர சத்திர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

வௌிநோயாளர் பிரிவு, இருதய நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சுவாசநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் வழமைபோல சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பிரத்தியேகமாக இரண்டு விடுதிகள் தயார் செய்யப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.