Header Ads



ஒன்றுக்கூடி சாப்பிட வேண்டாம்


நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள், ஒன்றுகூடி உணவு உண்பதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவு உட்கொள்ளும் போது, முகக்கவசங்களை அகற்ற வேண்டியுள்ளதால், அந்தச் சந்தர்ப்பத்தில்,  கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன  என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சுகாதார விதிமுறைகளை முறையாகப் பேணி நடக்குமாறும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் உடல்வெப்ப நிலையை அடிக்கடி சோதிப்பதற்கான வசதிகளை, நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.