Header Ads



பொரளை வைத்தியாசாலையின் முன்பாக, ஏற்பட்ட பதற்றம் (படங்கள்)


அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்குவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு  அருகில் இன்று -25- குழப்பமான சூழ்நிலை நிலவியது.

அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கவேண்டும் என கோரி 3000க்கும் அதிகமான மக்கள் காத்திருந்த வேளையே குழப்பமான நிலை உருவானது.

மருத்துவமனைக்குள் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து பெருமளவான மக்கள் இன்று காலை மருத்துவமனைக்கு வெளியே குவியத்தொடங்கினர்.

பலர் அந்த பகுதிக்கு சென்று, தங்களிற்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்க தொடங்கினார்கள், இதன் காரணமாக அந்த பகுதியில் சமூகவிலக்கல் முற்றாக புறக்கணிக்கப்படும் நிலையேற்பட்டது.

இரண்டாவது டோஸ் மருந்தினை அரசாங்கம் வழங்கமுடியாத நிலையில் உள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி  அதிகரித்துவரும் நிலையிலேயே இன்று இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. TL


No comments

Powered by Blogger.