Header Ads



கேஸ் சிலீண்டருடன் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வந்த கபீரும், ரஞ்சித்தும்


இன்று(06) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளார் ரன்சித் மத்தும பண்டார தெரிவித்த கருத்துக்கள். 

அரசாங்கம் அமைச்சரவை அனுமதியுடன் ஒரே தடவையில் இரசாயனப் பசளைகளை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது. இவ்வாறு தடை செய்தது பல பிரச்சிணைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. இத்தகைய ஒரே தடைவையிலான இறக்குமதித் தடை எமது நாட்டிற்கு பெறுத்தமற்றது. ஒரே தடவையில் தடையை ஏற்ப்டுத்தியதால் பெரிதும் பாதிக்கப்படப்போவது விவசாயிகளாகும். 1960 இல் பசுமைப் புரட்சியில் உணவு உற்பத்தியை அதிகரிக்க இரசாயனப் பசளை பாசளை அதிகரிக்கப்பட்டது.ஏனைய பயிர் செய்களைகளுக்கும் இதன் பாவனை அதிகரிக்கப்பட்டது. இரசாயனைப் பசளையை விட்டு விட்டு காபனிக் பசளைகளை 1.5% உலக நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 1.2% காபனிக் பசளை பயன்படுத்தப்படுகிறது. அபிவிருத்தியடைந்த பணபலம் கொண்ட நாடுகளே காபனிக் பசளை பாவனையை கையாள்கிறது.அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் 16% காபனிக் பசளை பயன்படுத்தப்படுகிறது. 

எமது நாட்டில் அடுத்த வருட நெல் அறுவடை 12 இலட்சம் மெட்ரிக் டொன்னாக எதிர்பார்ககப்பட்டுள்ளது.ஆனால் பயிர்களுக்கு தோவையான பசளைகளையும் ஆட்கொள்ளிகளையும் மாற்றீடுகள் இல்லாமல் தடை செய்ததால் அறுவடைகளில் குறைவு ஏற்படும். உற்பத்தி குறையும். 40.1% அறுவடையே அடுத்த வருடம் கிடைக்கப்பெறும்.இரசாயனப் பசளைகளைக்காக ஆண்டுற்கு 80 பில்லியன் நிதி செலவளிக்கப்படுகிறது. நாட்டில் 27% விவசாயிகள் உள்ளனர்.இவர்களுடைய அடிப்படை வருவாய் விவசாய செய்கையை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது.20 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இலங்கை சுதந்திரக் கட்சியே ஆட்சியமைத்துள்ளது. விவசாயிகளை கஷ்டத்திற்குள் தள்ளியே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றனர். 

தேயிலை உற்பத்தியால் கடந்த ஆண்டில் மாத்திரம் 270 மல்லியன் அந்நியச் செலாவனியைப் பெற்றுள்ளோம். தேயிலை உற்பத்தி செயன் முறைகளைக கும் இரசாயனப் பசளை இன்றியமையாதது. மாற்றீடுகள் இல்லாத தடையால் தேயிலை உற்ப்பத்தியிலும் அறுவடை குறையும்,இதனால் கிடைக்கப்பெறும் அந்நியசெலாவனி குறையும். பொருந்தோட்டத் துறை கம்பனிகளும் இதைத் தான் கூறுகிறது.1000 ரூபா சம்பளம் எவ்வாறு போனாலும் தேயிலை உற்பத்தியிலும் 50% குறைவு ஏற்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளன.உழுந்து உற்பத்தி 80% குறையும்.சோளம் உற்பத்தி 50% குறையும். இரப்பர் உற்ப்பத்தியும் குறையும். இதனால் ஏற்படும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 90 பில்லியனிக்கும் அதிகமான நிதி செலவாகும்.எனவே அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் போது தூர நோக்கு மற்றும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இரசாயனப் பசளைகளைத் தடை செய்த அரசாங்கம் காபனிக் பசளைகளை உற்பத்தி செய்ய இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று அரசாங்கத்திடம் வினவுகிறோம். பழங்கள் உற்ப்பத்தியும் கழமரக்கறி உற்ப்பத்திகளும் 50% ஆல் குறையும்.

கோவிட் தொற்றுகளும் மரணங்களும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் விவசாயிகளின் அடிப்படை வருமானங்களையும் இல்லாமலாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் எடுத்துள்ளது. மக்கள் கஷ்டப்படுள்ள இன்றைய நாட்களில் மீண்டும் மீண்டும் கஷ்டங்களை அரசாங்க தரப்பே ஏற்ப்படுத்துகிறது.இத்தகைய தீர்வுகள் 1970 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலையை ஞாபகப்படுத்துகிறது. அன்று ஏற்ப்பட்ட நிலையை மஹிந்த ராஜபக்‌ஷவும் நன்கு அறிந்தவர். அரிசியைப் பெற்றுக் கொள்ள மக்கள் வரிசைகளில் நின்ற காலம் அது.அத்தகைய நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகவே திடீர் தடைகள் ஏற்ப்படுத்தும். 10 அல்லது 15 வருட திட்டத்தில் பிரயோக ரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று,இத்தகைய திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளும் பட்சத்தில் ஜக்கிய மக்கள் சக்தியும் ஆதரவு வழங்கும். 

இன்றைய கொரோனா நிலையை அரசாங்கமே பெறுப்பெடுக்க வேண்டும். முதலாம் அலை தேர்தலுக்காக உருவானது. இரண்டாம் அலையும் நாட்டில் கொரோனா குறைவு என்ற அரச சார்பான ஊடகங்களின் மாயைகளால் உருவானது,தற்போதைய மூன்றாம் அலை அரசாங்கத்தின் பெறுப்பற்ற நடவடிக்கை எடுக்காமையினால் புத்தாண்டால் உருவானது. புத்தாண்டு காலத்தில் அரச மருத்துவ சங்கம்,சுகாதார பொது பரிசோதகர்கள் சங்கம் உட்பட பலர் நாட்டை முடக்குமாறு கோரினர்.இந்தியாவிலும் இவ்வாறு தான் தேர்தலுக்காகவும் சமய நிகழ்வுகளுக்காகவும் அனுமதி வழங்கியதால் ஏற்ப்பட்டது. முதலாம் அலை ஏற்பட்ட போது சஜித் பிரேமதாச பல உடனடி நடவடிக்கைகளையும் முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு கூறினார். அரசாங்கம் கனவத்திற்

 கொள்ளாது அரசியலாக நோக்கினர்.எதிர்க்கட்சிகளையும் எத்தகைய நடவடிக்கைகளிலும் உள்வாங்கவில்லை.ஒரே ஒரு தடவை அழைத்தனர்.கொரோனா ஒழுப்பின் தேசிய வேலைத் திட்டத்தை நாட்டிற்கு முன்வையுங்கள்.சகலரினதுமர ஒத்துழைப்பைப் பெற்று நாட்டு மக்களைப் பாதுகாருங்கள் என்று அரசாங்கதிடம் வேண்டுக் கொள்கிறோம்.ஐக்கிய மக்கள்

 சக்தியும் ஆதரவு வழங்கும்.சஜித் பிரேமதாச சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெறும் முயற்சியை ஏற்படுத்தி வருகிறார் என்று தெரிவித

த அவர் தற்போதைய நாட்டின் பரவல் நிலையைக்கும் அதனால் ஏற்படும் ஏனைய பாதுகாப்பற்ற நிலைக்கும் அரசாங்கமே பெறுப்பு என்று தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.