Header Ads



பொறுப்பான பிரஜைகளாக, நல்ல முஸ்லிம்களாக கொரோனா சட்ட திட்டங்களை அச்சொட்டாக பின்பற்றுவோம்


- Shaheed Rizwan -

நோன்பு கடைசி பத்து, அடுத்த வாரம் பெருநாள் என்றிருக்கும் நிலையில், மாத்தளை மாவட்டத்தில் லொக்டவுன் அமுலில் உள்ளது. ஒரு வகையில் சங்கடமாக இருந்தாலும் மறுபக்கம் சந்தோசமாகவும் உள்ளது. 

யார்டா இது? நல்ல நாள் பெருநாள்ல லாக்டவுன் நல்லதுனு சொல்றானேனு யோசிப்பீங்க, உண்மைதான், இயல்பாவே சொல்பேச்சி கேக்காத சமூகம் நாங்க, நடுரோட்டால நடந்து போறத கெத்தா நெனச்சி வாழுற ஒரு சமூகம், எமது பாதுகாப்பு கருதி இயற்றப்பட்டுள்ள சில சட்டங்களை கூட ஒரு சடங்காக, தண்டத்துக்கு பயந்து ஃபாலோ பண்ணும் ஒரு சமூகம்,

ஜனாஸா எரிப்பின் போது மாத்திரம் கவனமாக இருந்த நாம், அடக்கம் செய்ய அனுமதித்தது தான் தாமதம், எதுவுமே நடக்காதது போல நுவரேலியா ட்ரிப், தார்பூர்னு கல்யாணங்கள், பெருநாள் ஷாப்பிங்னு கண்ணுமண்ணு தெரியாத ஒரு குருட்டு கூட்டமாக நடந்து கொள்கிறோம்.

நமது அண்டை நாடான இந்தியாவில் வீடுதோரும் நோயாளி, தெருவெல்லாம் மரண ஓலம், ஆனால் எமக்கு அது வெறுமனே வாட்சப்பில் ஷெயார் செய்யும் செய்தியாக!

அமெரிக்காவில் தொற்றுநோய் நிபுணரான டாக்டர் கபில் ராஜேந்திரா நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது மாமனாரை நலம் விசாரிக்க இந்தியா வருகை தருகிறார், இந்தியாவில் இவருக்கு கொரோனா தாக்கி மரணிக்கிறார் டாக்டர், 

இந்தியாவில் கொரோனாவில் மரணிப்பதொன்றும் பெரிய விசயமில்லையே என நீங்கள் கேட்கலாம், 

சரிதான், இங்கே என்ன விசேசமென்றால் டாக்டர் கபில், அமேரிக்காவில் வைத்து இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர் என்பது தான் இங்கே ஹைலைட், 

அதுவும் Pfizer vaccine! 

(ஊசியடிக்கிறது வேஸ்ட்டுனு சொன்னோமில்ல? என்று வாட்சப் ஹீலர்கள், பின்னூரிகள்  கம்பு சுத்த வந்தா செம்மையா கிடைக்கும் என்பதை இத்தாள் அறியத் தருகிறேன்)

ரெண்டு வெக்சீன் போட்ட அமேரிக்க டாக்டருக்கே இந்த நிலையைன்றால், நாடிக்கு பேஸ்மாஸ்க் போட்டு, சமூக இடைவெளி பேணாமல் இருக்கும் எம் போன்றவர்களின் நிலை? 

அரசாங்கம் நமது பெருநாளை மனதில் வைத்து கூட லாக்டவுன் பண்ணட்டும் பரவாயில்லை, அது எமக்கு நன்மையையே பெற்றுத் தரும் என நல்லெண்ணம் கொள்வோம், 

ஆம் நெகட்டிவ்வா தெரிந்த, ஹுதைபியா உடன்படிக்கை எமக்கு பெற்றுத் தந்த ஹைர்களை நினைவு கூறுவோம், 

ஆரோக்கியம் ஒரு அமானிதம், எம்மால் இன்னொருவருக்கு தொற்று ஏற்படுமானால் நாம் நோற்ற நோம்பில் எந்த பலனுமே இல்லை.

இறைவனுக்கான கடமைகளை தள்ளிப்போட, தவிர்க்க மார்க்கம் அனுமதித்திருக்கும் அதேவேளை, சக மனிதர்களுக்கு அநியாயம் செய்வதை இறைவன் மன்னிக்க மாட்டான்.

நாம் ஒரு தீவில் வாழ்பவர்கள், இந்தியாவின் நிலமை எமக்கு வந்தால் எம்மால் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது,

எனவே பொறுப்பான பிரஜைகளாக, நல்ல முஸ்லிம்களாக கொரோனா சட்ட திட்டங்களை அச்சொட்டாக பின்பற்றுவோம். 

இறைவனிடத்தில் இருந்து உதவியும் சக இனத்தவர்களிடமிருந்து நற்பேறும் கிடைக்கும்.

அஹ்லாக்குகளை போன்ற இன நல்லிணக்கம் எதுவும் கிடையாது.

பெருநாள் ஷாப்பிங்கை முற்றாக தவிர்ப்போம், 

வீட்டிலேயே இருப்போம்,

தனிமனிதர்கள் சேர்த்ததுதான் குடும்பம், சமூகம், நாடு.

சுயகட்டுப்பாடோடு நடப்போமாக! 

3 comments:

  1. Good news... good article will our community understand this??? Maybe be they r targeting our festival. never mind Allah will make things good for us insha allah..

    ReplyDelete
  2. உண்மையான விடயம்.நாங்கள் முன்மாதிரியாக இருந்தால் எவ்வளவோ விசயங்களை சாதிக்கலாம் இன்ஸா அல்லாஹ்.நியாஸ் இப்றாஹிம்.

    ReplyDelete

Powered by Blogger.