Header Ads



களுத்துறை மாவட்டத்தில் 8 முஸ்லிம் பாடசாலைகள், தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு - நன்றி கூறுகிறார் மர்ஜான் பளீல் Mp


களுத்துறை மாவட்டத்திலுள்ள 08 முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக கல்வியமைச்சினால்  தரமுயர்த்தப்பட்டுள்ளன

அந்த வகையில் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், முன்னாள் பாணந்துறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நப்ஹான் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் தேசிய பாடசாலையாகவும

பண்டாரகம அட்டுலுகம அல்கஸ்ஸாலி முஸ்லிம் மகா வித்தியாலயம் பாராளுமன்ற உறுப்பினர் லலித்  எல்லாவல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரின் பேரில் தேசிய பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 

களுத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், களுத்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன,  அமைச்சர்  அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் தேசிய பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளன. 

மேலும், பேருவளைத்தொகுதி யிலுள்ள சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, ஸேம் ரிபாய் ஹாஜியார் முஸ்லிம் மகளிர் கல்லூரி,  தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகள் பிரதியமைச்சர் பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் தேசிய பாடசாலையாகவும் கல்வியமைச்சினால்  தரமுயர்த்தப்பட்டுள்ளன. 

மேற்படி பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு தனக்கு  ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் உட்பட கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ்,  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் ஆகியோருக்கு எமது களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

3 comments:

  1. ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இந்த வலை செய்தி வெளியீட்டில் புகார் செய்வதை விட இது போன்ற விஷயங்களைச் செய்வது நல்லது. இது "பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம்", இன்ஷா அல்லாஹ். க .ரவ மர்ஜன் ஃபலீல் ஒரு செயலூக்க அரசியல்வாதி, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவராக இருப்பார், இன்ஷா அல்லாஹ். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்திருக்க வேண்டும். பாராட்டத்தக்க வேலை. கடவுள் வல்லமையுள்ள அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாராக.
    நூர் நிஜாம் - கன்வீனர் "தி முஸ்லீம் குரல்".

    ReplyDelete
  2. ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இந்த வலை செய்தி வெளியீட்டில் புகார் செய்வதை விட மற்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் இது போன்ற விஷயங்களைச் செய்வது நல்லது. இது "பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம்", இன்ஷா அல்லாஹ். க .ரவ மர்ஜன் ஃபலீல் ஒரு செயலூக்க அரசியல்வாதி, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவராக இருப்பார், இன்ஷா அல்லாஹ்.
    நூர் நிஜாம் - கன்வீனர் "தி முஸ்லீம் குரல்".
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.