Header Ads



4 வது கொரோனா அலையும் வரும் - 50 நாள்களுக்கு அதீத கவனத்துடன் இருப்பது அவசியம் - WHO


தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகைள மீறிச் செயற்பட்டால், கொரோனா வைரஸ் தொற்றின் 4ஆவது அலையை எதிர்கொள்ள நேரிடுமென, தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“இந்நிலையில், எதிர்வரும் 50 நாள்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்” என்று, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இந்த கொரோனா ஒழிப்புக்காக உலகம் முழுவதும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் தொற்றுப் பரவல், ஒப்பீட்டளவில் ஓரளவு குறைந்திருந்தாலும் எதிர்வரும் நாள்களில் தொற்றுப் பரவல் குறித்து உறுதியாக கணிக்க முடியாதுள்ளது என்றும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு முறை மற்றும் சுகாதார முறைகளைத் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதன் ஊடாக மாத்திரம் கொரோனா தொற்றைத் தடுக்க முடியாது என்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே, அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது பிரதான பணியாகும் என்றும் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.