Header Ads



2 தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன


- எஸ்.றொசேரியன் லெம்பேட் -

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி, பக்தர்களை ஒன்றுகூட்டி திருவிழா, திருப்பலி நடைபெற்ற இரு தேவாலயங்கள், இம்மாதம் தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு தேவாலயங்களுமே நேற்று (01) காலை  திருவிழா, திருப்பலி நடைபெற்றமையால் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 14 நாட்களுக்கு மேற்படி இரு தேவாலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.