Header Ads



21 கிராம சேவகர் பிரிவுகள், இன்று உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டன (முழு விபரம் இணைப்பு)


நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, 

இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும் பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள். 

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்த, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு மற்றும் தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள். 

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவு 

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.