Header Ads



செப்டம்பருக்குள் 20.000 பேர் உயிரிழக்கும் ஆபத்து - மங்கள


இலங்கை தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் நிலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 20.000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வோசிங்டன் பல்கலைகழகத்தின் ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை இந்த ஆராய்ச்சி குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார், அமெரிக்க பல்கலைகழகம் கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளது உலகமுழுவதும் காணப்படும் நிலை குறித்து ஆராய்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை அமெரிக்கா இ;ங்கிலாந்து ஆகியநாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளன என தெரிவித்துள்ளது,இதன் காரணமாக இலங்கை இந்த நாடுகளை முன்மாதிரிகளாக கருதவேண்டும் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

பேரழிவை தவிர்ப்பதற்காக கூடியவிரைவில் இலங்கை தனது சனத்தொகையின்  70 வீதமானவர்களிற்கு தடுப்பூசியை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை வேகமாக செயற்பட்டால் இலங்கை பேரழிவை தவிர்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.