Header Ads



11 நாடுகளிலிருந்து வருபவர்கள், நாட்டிற்குள் நுழைய அனுமதி - சவுதி முக்கிய அறிவிப்பு


கொரோனா பரவலை தடுக்க வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த சவுதி அரேபியா, தற்போது 11 நாடுகளுக்கு மட்டும் குறித்த தடையை நீக்கியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்தியா, பிரித்தானியா, பிரேசில், தென் ஆப்பரிக்கா என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கொரோனா மாறுபாடு உருவானதால் உலக நாடுகள் சர்வதேச பயணிங்களுக்கு தடை விதிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

அந்த வரிசையில் சவுதி அரேபியாவும் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்தது.

இந்நிலையில், குறிப்பிட்ட 11 நாடுகளுக்கு மட்டும் தடையை நீக்குவதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தேவை என குறிப்பிட்டுள்ளது.

அதன் படி ஞாயிற்றுக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனி, அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், பிரித்தானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டிலிருநந்து வரும் பயணிகள் சவுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.  

1 comment:

  1. தன் இதயத்தில் இருக்கும் இஷ்ரேல ஏன் மறந்ததோ?

    ReplyDelete

Powered by Blogger.