Header Ads



10 மாதங்களில் 3 முறை தொற்றுக்கு ஆளான கர்ப்பிணியான சாரா ஷாம்


¨கடந்த ஆண்டு ஜூலை மாதம்.. இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்திருந்த சூழல்.. பிரசவ தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார், மும்பையை சேர்ந்த சாரா ஷாம் எனும் 32 வயது பெண்மணி. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.

தைரியமாக கொரோனாவை எதிர்கொண்ட அவர், ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்று எடுத்து முதல் முறையாக தாயானார். சிகிச்சைக்குப் பிறகு இருவருக்கும் தொற்று இல்லை என உறுதியானதும், தாய்ப்பால் கொடுக்க தொடங்கினார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு திடீரென, சாரா அதிகப்படியான சோர்வை உணர்ந்துள்ளார். குழந்தைக்கு தாய்ப்பால் அளித்துக் கொண்டு இருப்பதால், பாதுகாப்பு கருதி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவில், சாரா நினைத்ததை போன்றே, மீண்டும் தொற்று உறுதியானது.

சாராவும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் குழப்பத்திற்கு ஆளாகினர். தொற்றில் இருந்து குணமடைந்தவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படுமா என பல சந்தேகங்கள் எழுந்தன. அதற்கான பதில்கள் கிடைப்பதற்குள்ளாக, 3 மாதங்கள் கடந்து போயின. இந்த முறை மீண்டும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

சாராவின் குடும்பத்தார் அஞ்சியது போன்றே, மூன்றாவது முறையாக மீண்டும் அவருக்கு தொற்று உறுதியானது. இதனால். குழந்தையை விட்டு பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.. மீண்டும் தனிமைப் படுத்தப்பட்டதால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார் சாரா. ஆனாலும், அச்சமின்றி கொரோனாவை எதிர்கொண்ட சாராவின் மன உறுதி, தொற்றில் இருந்து குணமடையை அவருக்கு 
உதவியது.

மேலும் படிக்க... தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

சாராவைப் போன்றவர்களுக்கு இது எளிதானது அல்ல என்றாலும், அவரது தன்னம்பிக்கை தாய்மார்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. தொற்றையும், அதனால் ஏற்படும் மன அழுத்ததையும் நம்மை ஆட்கொள்ள விடாமல், எதிர்த்து போராட அவர் கற்றுக் கொடுத்துள்ளார். ஆரோக்கியமான உணவின் மூலம் கிடைத்த வலுவான நோய் எதிர்ப்பு சக்தியும், நேர்மறையான எண்ணங்களுமே தொற்றில் இருந்து விடுபட தனக்கு உதவியதாகவும் சாரா தெரிவிக்கிறார்

NEWS18 TAMIL

No comments

Powered by Blogger.