Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்கள் இல்லை, நாங்கள் மன வேதனைப்படுகிறோம் - கலையரசன் Mp


தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். இந்நிலை எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். 

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று -20- மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்கள் இறைவழிபாட்டைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒருநிலைமை இன்று இந்த நாட்டிலே நிலவுகின்றது. இந்து ஆலயம் அமைப்பதென்றால் பல இழுத்தடிப்புகளும், பௌத்த ஆலயம் அமைப்பதென்றால் உடனடி நடைமுறைகளுமே இங்கு இடம்பெறுகின்றது.

நாங்கள் வடக்கு கிழக்கு என்ற ரீதியில் மாத்திரமல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்குமான ஒரு தீர்வை வேண்டி நிற்கின்ற போது எங்களோடு தமிழ் பேசும் உறவுகளாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள்.

கடந்த காலங்களிலும் எம்மோடு ஜனநாயக ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று எம்மிடம் தெரிவித்து விட்டு அதற்கு மாறாக அரசுடன் இணைந்த சம்பவங்களே பல இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டிருந்தாலும் கிழக்கில் இருக்கின்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நலன்களுக்காக எமது சமூகத்தில் இருக்கின்ற சில அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காக இப்போதும் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பாகக் கல்முனைத தமிழ் பிரதேச செயலகம் என்ற அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டத்தினை ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுப்பதென்பது மிகவும் ஒரு மன வேதனையான விடயம்.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் எமது கட்சி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களை எமது கட்சி முன்னெடுத்திருந்தது. இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்பதற்காககத் தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்கின்றோம்.

அவர்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டிலே இருக்கின்ற சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமான விடயங்களைச் சாதிப்பதென்பது எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும்.

அதனையே அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். நாங்கள் மனவேதனைப் படுகின்றோம்;. இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் நிறுத்த வேண்டும். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள்சிந்தித்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. எனவே எதிர்காலத்தில் நாங்கள் எமது செயற்பாடுகளை தூரநோக்குக் கொண்டு அமைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

3 comments:

  1. இவர்கள் முஸ்லிம்களின் நகரை துண்டாக்கி திருட்டு தனமாக கபளீகரம் செய்யபார்ப்பார்கள் அதற்க்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் இவர்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட வேண்டுமோ ? ஒன்றுக்குமே உருப்படாத 75 வருட கால இவர்களுடைய பஞ்ச அரசியலில் இவர்கள் வயிற்றை வளர்த்துக்கொண்டு தமிழனுங்களை பிச்சை எடுக்க வைத்தது தான் இவர்களுடைய சாதனை. இதில் முஸ்லிம்களும் சேர்ந்து இவர்களோடு நாசமாகி போக வேண்டுமா? அடேய் வெட்கம் கெட்ட ஜடங்கலே நீங்கள் முன்பக்கமாக அரசை விமர்சித்து பின்னால் அவர்களின் கால்களை நக்குபவர்கள் என்பது நாடறிந்த உண்மை

    ReplyDelete
  2. ??????? முன்னாலும் பின்னாலும்??????

    ReplyDelete
  3. Aarukadakumvarai..உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் அப்புறம்? ஏன் maddakalapil தமிழ் மக்கள் மட்டுமே வாழ வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.