Header Ads



கண்ணியமாக வாழ ஆட்சியாளர்களுடன் இணைந்துகொள்ள வேண்டுமென இம்ரான்கான் எங்களிடம் கூறினார் - இஷாக் Mp


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, ஆட்சி மாறினாலும் சரி கோத்தபாய,மஹிந்த பெசில் போன்ற நல்லதொரு தலைவர்களை காண முடியாது நாட்டை திறம்பட அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றவர்களே இவர்கள் என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (10) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 சமூகமே ஏமாந்து விடாதீர்கள் கல்வியில் மார்க்கத்தில் அக்கரை கொண்ட நாங்கள் சிலரின்  இனவாத  பேச்சுக்களுக்கு ஏமாறக்கூடாது. இனவாதம் மதவாதம் ஒழிய வேண்டும் கன்னியமாகவும் கௌரவமாகவும் நாம் சிறுபான்மை சமூகமாக வாழவேண்டுமானால் தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனே இணைந்து வாழவேண்டும் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது. 

பெசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவனை யாராலும் கண்டு கொள்ள முடியாது எங்கள் ஏழுபேரையும் பாரிய அபிவிருத்தி ஊடாக இணைத்துக் கொண்டு செல்லும் நிமால் லான்சா போன்ற இராஜாங்க  அமைச்சரும் இங்கு இருக்கிறார். 

அண்ணையில் நாட்டுக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாட்டு பிரதமர் எங்களிடண் கூறியதாவது கன்னியமாக வாழவேண்டுமானால் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டுதான் சென்றார். உலகின் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமைகளுடன் தற்போது இதைந்தால் தான் எமக்கு நிம்மதியாக வாழ முடியும் என்றார். 

4 comments:

  1. Really?? Are you closed your eyes...what is going on in the country...for all people? specially the cost and bane and lots of items..?

    ReplyDelete
  2. இஸ்லாத்தை மறந்த பேச்சு. ஆட்சியாலர்கள் அனியாயம் செய்தாலுமா? அப்படியானால் அந்த கன்னியம் பெரும் கேவலத்திலும் அழிவிலும் போய் முடியும்.

    ReplyDelete
  3. அது என்ன வேத வாக்கா?

    ReplyDelete

Powered by Blogger.