Header Ads



இஸ்லாமிய தீவிரவாதிகள் எனும் அவதூறை அழித்த இயக்குனர் K.V ஆனந்த் மரணம்.


ஒரு பத்திரிகை ஒளிப்பதிவாளராக இருந்து பிறகு சினிமா ஒளிப்பதிவாளராகி, அயன் படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனராக உருவானவர் K.V ஆனந்த்.

சளித்து போன மசாலா படங்களின் போக்கையே மாற்றியவர், ஃப்ளாஷ்பேக் காட்சிக்கென தனி எதிர்பார்ப்பையே உருவாக்கியவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய தீவிரவாதம் எனும் அவதூறு அசிங்கங்களை பரப்பிய ரோஜா, வல்லரசு, ஒற்றன், விஸ்வரூபம், உன்னைப்போல் ஒருவன், பயணம் போன்ற பொய் பிம்பங்களும், காசுக்கு மாரடிக்கும் ஊடகங்களும் தான் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தமிழக மக்களின் மனதில் விஷத்தை விதைக்க காரணமாக இருந்தது.

அந்த அனைத்து அவதூறுகளையும் அழிக்கும் விதமாக #கவண் எனும் திரைப்படம் எடுத்தார் K.V ஆனந்த்.

முஸ்லிம்கள் மீது பொய்யை பரப்பிய சினிமா மற்றும் ஊடகங்களின் முகத்திரையை ஒரே படத்தில் கிழித்து எறிந்து, மக்களின் மனதில் உண்மையை விதைத்தார்.

அந்த நல்ல மனிதர் இன்று நம்மோடு இல்லை. அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

-பாரூக்-

2 comments:

  1. நல்ல வர்கள் கெட்ட பூமியில் நிலைத்து இருப்பதில்லை

    ReplyDelete
  2. Nallavarkalin muyatsikal veenpoavathillai...

    ReplyDelete

Powered by Blogger.