Header Ads



வீரவன்ச, கம்மன்பில, அபயராம இல்லையென்றால் மொட்டு இல்லை - முருத்தெட்டுவே அனந்த தேரர்


அரசாங்கம் தோல்வியை தவிர்க்க விரும்பினால் மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது என பௌத்தமதகுரு முருத்தெட்டுவே அனந்ததேரோ  ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தலில் தோல்வியடையக்கூடாது என நினைத்தால் மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு அதிஸ்டமில்லாதது போன்று, தேங்காய்எண்ணெய் நெருக்கடி உருவாகியுள்ளது,பொருட்களின் விலைகள் உச்சத்தைதொட்டுள்ளன,அமைச்சர்கள் என்ன சொன்னாலும் நாங்கள் பொருள்கொள்வனவிற்காக கடைகளிற்கு செல்லவேண்டியுள்ளது கடைகளில் காணப்படும் விலைகளுக்கும் அமைச்சர்கள் தெரிவிக்கும் விலைகளிற்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிஅரசாங்கத்தினால் ஏற்பட்டபேரழிவை மாற்றியமைப்பதற்காகவே நாங்கள் புதிய அரசாங்கத்தை நியமித்தோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்

விமல்வீரவன்சவும் உதயகம்மன்பிலவும் அபயராமவும் அதன்  குழுவும் இல்லாவிட்டால் மொட்டு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் தேர்தலை நடத்த விரும்பினால்நடத்துங்கள் அதன்பின்னர் அரசாங்கத்தின் உண்மை நிலை தெரியவரும் எனவும் பௌத்தமதகுரு முருத்தெட்டுவே அனந்ததேரோ  தெரிவித்துள்ளார்.

தோல்வியை சந்திக்க விரும்பினால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thnakkural

1 comment:

  1. he is no talking about country, he is for only racist vi & ga

    ReplyDelete

Powered by Blogger.