Header Ads



கெட்ச் அப் தட்டுப்பாடு - திண்டாடும் அமெரிக்கா - என்ன ஆச்சு..?


அமெரிக்காவில் கணிசமான உணவுகளோடு பயன்படுத்தப்படும் ஒரு உட்பொருள், இந்த கெட்ச் அப்கள். கொரோனா வைரஸால் அமெரிக்காவிலேயே கெட்ச் அப் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

திடீரென அமெரிக்காவில் கெட்ச் அப்-க்கு தட்டுப்பாடு நிலவ என்ன காரணம்?

கொரோனா வைரஸ் தான் காரணம். இந்த வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, சிறிய கெட்ச் அப் பாக்கெட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அதன் தேவை, உற்பத்தியை விட அதிகரித்து அமெரிக்காவில் தட்டுப்பாடு நிலவுகிறது.

"அதிகம் பார்சல் வாங்கிச் செல்வது மற்றும் திடீரென அதிகரித்த டெலிவரிகளால் தான் இந்தத் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது" என அமெரிக்காவில் பரவலாக பயன்படுத்தப்படும் கெட்ச் அப் பிராண்டாமன ஹெய்ன்ஸ் (Hein's) கூறியுள்ளது.

மேலும் தங்கள் உற்பத்தியை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உற்பத்தி ஆலைகளில் தற்போது பல புதிய உற்பத்தி வரிசைகளை நிறுவி இருப்பதாகவும், உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் போது, கைகலால் தொடாமலேயே கெட்ச் அப்பை வழங்கும் இயந்திரத்தை (no-touch dispenser) உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளது ஹெய்ன்ஸ்.

இருப்பினும் சந்தையில் இருக்கும் தேவை, உற்பத்தியை விட அதிகமாக இருப்பதாக ஏ எஃப் பி செய்தி முகமையிடம் கூறியுள்ளது க்ராஃப்ட் ஹெய்ன்ஸ்.

உணவகங்களின் டேபிள்களில் வைக்கப்பட்டிருக்கும் கெட்ச் அப் பாட்டில்களை, இந்த சிறிய கெட்ச் அப் பாக்கெட்டுகள் மாற்றி இருக்கின்றன.

கடந்த ஜனவரி 2020 முதல் கெட்ச் அப்களின் விலை 13 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்த அமேசான் ஓட்டுநர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் - போலீஸ் அதிகாரி பலி

ஒரு துளி மனித ரத்தம் கலந்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ - ஒரு வணிகப் பரபரப்பு

உணவக மேலாளர்கள் மற்றும் உணவகங்களை நடத்துபவர்கள், கெட்ச் அப்-க்கு பதிலாக எதைக் கொடுக்கலாம் என, பெரிய சில்லறை வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அலசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிடுகிறது அப்பத்திரிகை.

"பிரெஞ்ச் ப்ரைஸ் உணவை எப்படி ஹெய்ன்ஸ் கெட்ச் அப் இல்லாமல் பரிமாறுவது?" என கொலராடோ மாகாணத்தில் டென்வர் நகரத்தில் இருக்கும் பிளேக் ஸ்ட்ரீட் டவெர்ன் என்கிற உணவகத்தின் உரிமையாளர் கேள்வி எழுப்புகிறார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின், இப்படி பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல என அமெரிக்க அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு முன் கழிவறை டிஸ்ஸூ ரோல்கள், பெப்பரோனி என்கிற பன்றி மற்றும் மாட்டு இறைச்சி கலந்த ஒரு வகையான உணவு, அலுமினியம் கேன் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

No comments

Powered by Blogger.