April 11, 2021

மகிந்த ராஜபக்ச தேசத்தின் தந்தை – மகன் ரோகித


தனது தந்தை மகிந்த ராஜபக்சவே தேசத்தின் தந்தை என ரோகித ராஜபக்ச டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ரோகித ராஜபக்ச தனது மூத்தசகோதரர் நாமல்ராஜபக்சவின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவிக்கும் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களின் தந்தை தேசத்தின் தந்தையானபோது, நீங்கள் மூத்த சகோதரர் என்பதையும் கடந்து, பொறுப்பேற்றுக்கொண்டீர்கள் யோசிதவிற்கும் எனக்கும் நீங்கள் இரண்டாவது தந்தையாக மாறினீர்கள், எங்களை பாதுகாப்பவராகவும், வழிகாட்டியாகவும் மாறினீர்கள் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். TL

0 கருத்துரைகள்:

Post a Comment