Header Ads



கொரோனா ஆபத்திலிருந்து அனைவரையும் பாதுகாக்க, பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுங்கள் - ACJU


1. இச்சோதனைகள் நீங்குவதற்காக ஒரு மாத காலத்திற்கு குனூத் அந்-நாஸிலாவை ஐவேளை தொழுகைகளில் சுருக்கமாக ஓதுவதோடு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடல். (குனூத் அந்-நாஸிலா பற்றிய விரிவான விளக்கமும் துஆவும் பின்வரும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது: https://acju.lk/news-ta/acju-news-ta/item/2005-covid-19)

2. சுகாதார அதிகாரிகளினாலும் வக்ஃப் சபையினாலும் வழங்கப்படும் அனைத்து அறிவுறுத்தல்களையும் முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக தொழுகைக்காக மஸ்ஜிதில் ஒன்று சேரும் விடயத்தில் அரசாங்கத்தினால் குறிப்பிடப்படும் எண்ணிக்கையுடையோரை மாத்திரம் மஸ்ஜிதுக்கு அனுமதித்தல். இதுவிடயத்தில் பொதுமக்கள் நிர்வாகிகளுக்கு உதவியாக இருத்தல்.

3. சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக மஸ்ஜித்களில் தொழும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் வீடுகளிலிருந்து குடும்பத்தாருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுது, ரமழானின் இறுதிப்பத்துடைய இரவு நேரங்களை அமல்களின் மூலம் உயிர்ப்பித்து, எமக்காகவும் முழு உலக மக்களுக்காகவும் விசேடமான துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடல். இவ்வாறு வீடுகளில் பர்ளான தொழுகைகளை தொழுவதன் மூலமாகவும் அதற்குரிய கூலி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியும்.

عن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : (إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيمًا صحيحًا) رواه البخاري.

ஓர் அடியார் ஆரோக்கியமானவராகவும் ஊரிலிருக்கும் போதும் செய்துவரும் நற்செயல்களுக்குக் கிடைப்பதைப் போன்ற (அதே) நன்மை அவர் நோயுற்றுவிடும் போதும் அல்லது பிரயாணத்தில் இருக்கும் போதும் அவருக்கு எழுதப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்-அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

4. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதாயினும் கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்வதைத் தவிர்ந்து, சுகாதார வழிமுறைகளைப் பேணி அவற்றை கொள்வனவு செய்தல்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன். 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.