Header Ads



சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, பள்ளிவாசல்கள் மூடப்படும் - வக்பு சபை எச்சரிக்கை


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் 19 செய­லணி மற்றும் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடி­யும்­வரை மூடி­வி­டு­வ­தற்கு வக்பு சபை தீர்­மா­னித்­துள்­ளது.

நாட்டின் பல பகு­தி­களில் அநே­க­மான பள்ளி வாசல்களில் கொவிட் 19 தொடர்­பான சுகா­தார வழி­காட்­டல்கள் மீறப்­ப­டு­வ­தா­கவும் பெரும் எண்­ணிக்­கையானோர் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் சுகா­தார வழி­காட்­டல்­களை அசட்டை செய்­வ­தாக வக்பு சபைக்கு ஆதா­ரங்­க­ளுடன் முறை­பா­டு­களை முன்­வைத்­தி­ருப்­ப­த­னாலே இவ்­வா­றான தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

நாட்டில் மீண்டும் கொவிட் 19 தொற்­றுநோய் பரவல் உரு­வாகும் சாத்­தியம் உரு­வா­கி­யி­ருப்­ப­தாக சுக­தார அமைச்சு எச்­ச­ரித்­தி­ருக்­கின்ற நிலையில் குரு­நாகல் மாவட்­டத்தில் இரண்டு முஸ்லிம் கிரா­மங்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் மேலும் தெரி­விக்­கையில் “அண்­மையில் சுகா­தார அமைச்சு நோன்பு காலத்தில் பள்­ளி­வா­சல்­களில் சுகா­தார வழி­காட்­டல்கள் தொடர்பில் சுற்­றிக்­கை­யொன்­றி­னை வெளி­யிட்­டி­ருந்­தது.

அவ்­வ­றிக்­கையில் பள்­ளி­வா­சல்­களில் ஜமாஅத் தொழு­கை­களில் 100 பேருக்கு உட்­பட்­ட­வர்­களே தொழ முடியும். ஒவ்­வொ­ரு­வரும் வீட்­டி­லி­ருந்து முஸல்­லாக்­களை எடுத்து வர வேண்டும். வீடு­க­ளிலே வுழூச் செய்து வர­வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் மாஸ்க் அணிந்­தி­ருக்­க­வேண்டும்.ஒரு மீற்றர் இடை­வெளி பேணப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்குள் நுழையும் ஒவ்­வொ­ரு­வ­ரதும் உடல் உஷ்ண நிலை சோதிக்­கப்­ப­ட­வேண்டும் என்பன உட்­பட பல நிபந்­த­னைகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. ஆனால் இவை­களில் எவையும் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை என வக்பு சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

கஞ்சி விவ­கா­ரமும் சுற்­ற­றிக்­கை­யின்­படி பேணப்­ப­டு­வ­தில்லை என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. கஞ்சி பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென சுற்­ற­றிக்­கையில் தெரி­விக்கப்பட்டுள்ளது. இவ்­வி­வ­கா­ரமும் பின்­பற்­றப்­ப­டாது அலட்­சியம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான ஆதா­ரங்கள் புகைப்­ப­டங்கள் மூலம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் நாட்டில் கொவிட் 19 மூன்­றா­வது அலை உரு­வாக முஸ்லிம் சமூகம் கார­ண­மாக இருந்­தது என்ற குற்­றச்­சாட்டு எம்­மீது சுமத்­தப்­ப­டலாம். அதனால் பள்­ளி­வா­சல்கள் நோன்பு காலத்தில் வழங்­கப்­பட்­டுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களை முழு­மை­யாக கண்­டிப்­பாக பின்­பற்­ற­வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களில் சுகா­தார வழி­காட்­டல்கள் மீறப்­ப­டு­கின்­ற­மைக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களே பொறுப்புக் கூற­வேண்டும். இவ்­வா­றான நிலையில் வக்­பு­சபை குறிப்­பிட்ட பள்­ளி­வா­சல்­களை மூடாமல் இருப்­ப­தற்­காக வக்பு சபைக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றார்.- Vidivelli

2 comments:

  1. இவ்வாறான விடயங்களில் சலுகைகள் காட்டக்கூடாது. இறுக்கமாகச் செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  2. better close temple , never spread china virus form mosque ,
    last year rajapksa thugs terrorist government blamed as spreading china virus
    allah give punishment to shinkala mendal people now spreading china
    virus

    no need to close mosque

    ReplyDelete

Powered by Blogger.