Header Ads



நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஒத்திவைத்து, உன்னத சேவையில் டொக்டர் ஷிபா முகமத்


அந்த இஸ்லாமிய இளம்பெண்ணை எல்லோருமே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெண்ணின் பெயர் ஷிபா முகமத். சொந்த ஊர் கேரளா. கண்ணூர் அருகிலுள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்.

 ஒரு உன்னதமான போரில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் அந்த இளம் டாக்டர் ஷிபா.

கேரள மருத்துவமனையில் கோவிட் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள்.

டாக்டர் ஷிபா வேலை செய்யும் மருத்துவமனையின் உயர் அதிகாரி அவசரமாக ஷிபாவை அழைத்திருக்கிறார்.

"வணக்கம் சார்..!"

"ஷிபா, உங்களுக்கு திருமணமாமே ?"

"ஆமாம் சார், மார்ச் 29 ம் தேதி."

"வாழ்த்துகள். ஆனால் இதுவரை நீங்கள் விடுமுறைக்கு விண்ணப்பிக்கவில்லையே.

அதனால்தான் அழைத்தேன்.

எப்போதிலிருந்து உங்களுக்கு விடுமுறை வேண்டும் ?"

இதற்கு ஷிபா சொன்ன பதில், அந்த உயர் அதிகாரியை அதிர்ச்சி அடைய வைத்தது.

"இல்லை சார். திட்டமிட்டபடி மார்ச் 29 ல் நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை."

"என்ன சொல்கிறீர்கள் ஷிபா..?"

"கல்யாணம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் சார்.

என் மாப்பிள்ளை எனக்காக எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பார்.

ஆனால் அதுவரை இந்த கொரோனா தொற்று, மக்களை விட்டு வைத்து காத்திருக்குமா ?

எனக்கு என் தனிப்பட்ட வாழ்க்கையை விட, இங்கிருக்கும் நோயாளிகளின் நலன்தான் முக்கியம் சார்.

அவர்களை காப்பாற்றுவது முக்கியம். என்னைப் போன்ற டாக்டர்களை நம்பித்தானே அவர்கள் காத்திருக்கிறார்கள்."

உயர் அதிகாரி எதுவும் பேச முடியாமல் உள்ளம் நெகிழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தார்.

"பாராட்டுக்கள் ஷிபா.

உங்கள் பணியை நீங்கள் தொடரலாம்."

இதை பற்றி கேள்விப்பட்டு மீடியாக்காரர்கள் டாக்டர் ஷிபாவை தொடர்பு கொண்டபோது,

"இது ஒரு பெரிய விஷயமாக எனக்கு தோன்றவில்லை.

இந்த கொரொனா நோய்த் தொற்றால் எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

அவர்களில் நானும் ஒருத்தி.

அவ்வளவுதான்.

என் கடமையை மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன்.

இதற்கு மேல் இதைப் பற்றி பேச வேறு எதுவும் இல்லை."

இப்படி சொல்லி விட்டு மீண்டும் தனது மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப்பிரிவில் அவசரம் அவசரமாக நுழைந்து தனது பணியை தொடர்கிறார் டாக்டர் ஷிபா.

பாராட்டுக்கள் டாக்டர் ஷிபா !

சீக்கிரத்திலேயே இந்த கொரொனா முடிவுக்கு வர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

1 comment:

  1. இவற்றிற்கு எல்லாம் காரணம் இந்த வைத்தியர் இஸ்லாமிய நெறிமுறையில் வ6ளர்க்கப்பட்டதுதான். இறைவன் அன்னாருக்கு அருள் புரிவானாக.

    ReplyDelete

Powered by Blogger.