Header Ads



ரஞ்சனின் பதவி இழப்பிற்கு காரணம் யார்..? பரிசோதனைக் கருவியானாரா..?? வெளிவந்த பின்னணி


- IBC -

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறை தண்டனையை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.

இவரது பதவி இழப்பின் பின்னணியில் அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணியில் அரசாங்கத்தின் செல்வாக்கு இருப்பதாக ஒரு கருத்து இருந்தாலும் உண்மையில், ரஞ்சன் ராமநாயக்க இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலைமைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே.

அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? இந்த வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையான கதை எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது இவ்வாறு தான்.

நீதிமன்ற அவமதிப்புக்காக ரஞ்சன் ராமநாயக்க மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு முதலில் ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப் பிரிவால் கையாளப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முழு அறிவோடு ரஞ்சனுக்கு எந்த வகையிலும் பாரபட்சம் காட்டாத வகையில் கையாளப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் ரஞ்சன் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசங்கா நாணயக்கார ஆஜரானார்.

ரஞ்சனுக்கு எந்தவொரு சிக்கலான சூழ்நிலையையும் ஏற்படுத்தாத வகையில் வழக்கை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ரஞ்சனின் பதவியில் எவ்வித சிக்கலும் இல்லாத வகையில் வழக்கை நிறைவு செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை ரணில் விக்ரமசிங்க நிசங்கா நாணயக்காரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய மனு ஒன்றின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், வழக்கை தீர்ப்பதற்கான இறுதி கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப் பிரிவில் பணிபுரியும் சட்டத்தரணியான யசாத் டி சில்வாவும் இந்த மனுவை தயாரித்துள்ளார்.

மனு மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் கடுமையாக அறிவுரைக்குப் பிறகு விடுதலை செய்யப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவு எதிர்பார்த்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி சட்ட பிரிவினால் எல்லாம் இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இடையில் நாடாளுமன்றத்தில் ரஞ்சனை சந்தித்த சுமந்திரன் இந்த வழக்கு தொடர்பாக தான் இலவசமாக ஆஜராகுவதாகவும் வழக்கை விசாரித்து வெற்றியடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நிசங்க நாணயக்காரவிடம் வரும் ரஞ்சன் - சுமந்திரன் கூறிய கருத்துக்களை கூறி அவருக்கு இந்த வழக்கை வெற்றியடைய செய்ய முடியும் எனவும் அவர் இலவசமாக வழக்கில் ஆஜராகுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் நிலவும் சூழ்நிலையில் அது சாத்தியமில்லை எனவும் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து விடுதலையாகுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவு ரஞ்சனுக்கு அறிவுரை வழங்கியது.

இருந்தபோதும் விதி யாரை விட்டது என்ற ரீதியில் ரஞ்சன் ராமநாயக்க வழக்கை வெற்றிக்கொள்ளும் நோக்கில் அனைத்து ஆவணங்களையும் சுமந்திரனிடம் ஒப்படைத்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது ரஞ்சன் தவறு செய்ததாக சுமந்திரனும் உணர்ந்த நிலையில் மேலும் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டு வழக்கை தீர்த்து வைக்க முயன்றுள்ளார்.

இருப்பினும், முதல் சந்தர்ப்பத்தில், எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க அதைத் தவிர்த்து வழக்கை வெல்ல முயன்ற நிலையில் அவர் நீதிமன்றத்திற்கு வந்த ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சவால் விடுத்து, தனது குற்றத்தை சரிசெய்ய எந்த முயற்சியும் செய்யாமல் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியமையினால் ரஞ்சனுக்கு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆஜராக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரஞ்சன் ராமநாயக்க தனது வழக்கு தீர்ப்பின் ஒரு கட்டத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அது சுமந்திரனின் பேச்சால் முற்றிலும் தலைகீழாக மாறியது.

முதலாவது சந்தர்ப்பத்தில் விடுதலை அடையக்கூடிய வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழக்கப்பட்டது.

இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணியால் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சரியாக தெரியாத ஒரு அப்பாவியான எம்.பி.யை ஒரு பரிசோதனைக் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. lots of confusion in this news.... Cz Sumanthiran asked him earliest and first option to apologize to the court to get free. But only Ranjan refused and had guts to proof himself. Then Ranjan finally only he did apologize the court while the last bus gone. Now how this article finger Sumanthiran???? All confusing!!!!!

    ReplyDelete
  2. most people in the tamil political field is angry and do not like the prominance SUMANTHIRAN In the legal field.this is an attempt to SLING MUD AT SUMANTHIRAN.AFTER 20TH AMENDMENT THE LEGAL SYSTEM IN SRILANAK IS DEAF AND BLIND.THEY THE JUDGES WOULD HAVE NEVER GIVEN A RULING IN FAVOURE OF RANJAN.WHY BLAME SUMANTHIRAN.

    ReplyDelete

Powered by Blogger.