April 18, 2021

சகாத் கொடுத்தல் - இந்த உண்மைச் சம்பவத்தையும் படியுங்கள்

- Amir Rajabu -

இதுவும் நடந்த சம்பவமே .

சவுதியில் .. என்னுடைய முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு .. 300 ஆடுகள் இருக்கும் .

வருடம் ஒரு முறை ..அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 பெண் ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் .

அதை அப்படியே ஒரு ஏழையின் வீட்டில் இறக்கிவிடுவார் .. நானும் கூட செல்வேன் .

ஏன் ஒரே வீட்டிற்கு 20 ஆட்டையும் கொடுக்கிறாய் .. 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாமே ..  20 குடும்பம் உன்னை வாழ்த்துமே  .. அல்லது அவர்கள் உன் சொந்தமா  மொத்தத்தையும் ஒரே வீட்டில் கொடுக்கிறாயே என கேட்டேன் .

என் முதலாளி சொன்னார் ..நீ சொல்வது போல 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாம் ..  அப்படி பிரித்துக் கொடுக்கும் ஒரு ஆட்டை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் .. நாளையே யாரிடமாவது விற்றுவிட்டு அடுத்த 2 நாளில் செலவு செய்து விடுவார்கள் .அப்புறம் நம்மையும் மறந்து விடுவார்கள் .. நம்முடைய நன்மையின் அளவும்.அதோடு முடிந்து விடும் . 

அவர்களின் வறுமையும் ஒழியாது .

இப்ப நாம ஒரே வீட்டில் கொடுத்திருக்கோமே அந்த வீட்டில் அடுத்த சில வருடத்தில் வந்து பார் ..ஆடுகள் பண்ணையாயிருக்கும் .. அவர்கள் அந்த ஆடுகளை பார்க்கும்போதெல்லாம் நமக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள் .அந்த ஆடுகளை கொண்டு அவர் வறுமையும் நீங்கிவிடும் அவரும் யாருக்காவது ஜக்காத் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவார் .

அந்த ஆடுகளின் சந்ததிகள் அடுத்து அடுத்து ஜக்காத் பொருளாக கை மாறிக்கொண்டே போகும் காலமெல்லாம் நமக்கு நன்மை வந்துக் கொண்டே இருக்கும் .. என சொன்னார் .

இன்றைக்கு நம் மக்களின் நிலைமையை எண்ணி பார்க்கிறேன் .. இருக்கிற 100 வீடுகளில் 20 வீடுகள் ஏழைகள் வீடாக இருக்கும் .

அந்த 20 வீட்டிக்கும் என் முதலாளி செய்தது போல அன்றே யாராவது செய்திருந்தால் .. இன்று ஏழைகள் இல்லாத ஊராக மாறியிருக்கும் .

நாம் ஒவ்வொருவரும் ஜக்காத் கொடுக்கிறோம் .இல்லையென்று.. சொல்லவில்லை .

 ஆனால் அதை நாம் எப்படி கொடுக்கிறோம்   என்பதில் தான் ... சறுக்கி விடுகிறோம் .

ஜக்காத் கொடுப்பவர்கள் .. சிந்தியுங்கள் .ஏழைகள் இல்லாத முஸ்லீம் மக்களை உருவாக்குவோம் .

#நன்றி .

1 கருத்துரைகள்:

சவூதியில் மட்டுமல்ல; சகல செல்வந்த அரபு நாடுகளிலும் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் இதனைத்தான் செய்கின்றார்கள். ஒரு பெண்ணை ஜித்தா வீதியில் சந்தித்தேன். அவர் தனது எஜமான் 18 மாத சம்பளத்தைத் தரவில்லை; வந்து வாங்கித் தருமாறு சின்னப் பிள்ளைபோல் என்னிடம் கூறினாள் (அவரகளிடம் போய் இதனை எல்லாம் கேட்க எங்களால் சாதாரணமாக முடியாது.) அவளிடம் நாளை இதே நேரத்திற்கு இந்த இடத்திற்கு வருமாறு கூறிவிட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். நான் என் முதலாளியிடம் சென்று விடயத்தைக் கூறி அவளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டேன். அவர என்னிடம் கூறினார் நாங்கள் அரபு முஸ்லீம்கள் எங்களது வேலையாட்களின் பணத்தைத் "திருட"மாட்டோம். ஏதோ ஒரு தேவைக்காகத்தான் இவ்வாறு நடந்திருக்கும் என்று கூறி பரவாயில்லை நீ (என்னை) அந்தப் பெண்ணின் முதலாளியிடம் சென்று விசாரிக்குமாறு கூறினார். நானும் அவ்வாறு சென்று அவரிடம் (அந்த முதலாளியிடம்) கேட்க அவர் கூறினார். இவருக்கு எல்லா வசதிகளும்' எனது வீட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முதல் இரு மாதச் சம்பளத்தை அவரிடம் கொடுத்தோம். பின்னர் இரு கிழமைக்குப் பின்னர் பணத்தையும் அவளது வீட்டு விலாசத்தையும் அவரிடம் கேட்க பணததைச் செலவழித்துவிட்டதாகக் கூறினார் அன்றிலிருந்து அவருடைய சம்பளம் முழுவதனையும் சவூதி பிரிட்டிஷ் வங்கியில் சேமித்து வருகின்றேன். நாட்டிற்குச் செல்லும்போதுதான் அதனைக் ' கொடுப்பேன் என்று கூறினார். நான்தான் ஒரு உதவிக்காக அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்தேன். சவூதியர்கள் மாத்திரமல்ல மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் தயாள குணமுடையவர்கள். சரியான முறையில் தமது சகாத் சதக்காக்களை நிறைவேற்றி வருபவர்கள். சம்பளத்தையும் சரியாகக் கொடுப்பார்கள். எங்களுடைய வீண்விளையாட்டுக்கள் எல்லாம் அவரகளிடம் பலிக்கமாட்டாது. அவரகளை இலகுவில் ஏமாற்றவும் முடியாது.

Post a Comment