Header Ads



நாட்டை நேசிக்கும் முன்னுதாரண, தலைவர் எமக்கு கிடைத்துள்ளார் - ராஜாங்க அமைச்சர்


கோட்டாபய ராஜபக்ச ஹிட்லர் போல் நாட்டை ஆட்சி செய்வாளர் என அவருக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்துள்ளதாக அண்மையில் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியிருந்தமைக்கு ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா பதிலளித்துள்ளார்.

கம்பஹாவில் செய்தியாளர்களிடம் அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு தேவை ஹிட்லர் அல்ல. நாட்டை நேசிக்கும் முன்னுதாரணமான தலைவரே நாட்டுக்கு தேவை. அப்படியான தலைவர் எமக்கு கிடைத்துள்ளதாக நான் நினைக்கின்றேன்.

அந்த தலைவரின் பின்னால், பெரும் படை இருக்கின்றது. அவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால், அந்த தலைவர் முன்வைத்த கொள்கைளை அமுல்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இன்னும் நான்கு வருடங்களில் நாட்டில் பெரும் மாற்றத்தை காண முடியும். வலுவான தலைவர் என்பதும் சர்வாதிகாரி என்பதும் இருவேறானவை. காரணம் நாட்டின் சட்டங்கள் இருக்கின்றன.

அந்த சட்டத்திட்டங்களுக்கு அமையவே ஒரு தலைவர் செயற்படுவார். நாடு மக்களுக்கோ சொந்தமானது. ஜனநாயக முறையிலேய அந்த மக்களின் விருப்பம் தீர்மானிக்கப்படும்.

ஜனநாயக முறையில் தெரிவான தலைவருக்கு, அந்த தலைவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிய நிறைவேற்ற தேவையான சூழல் இருக்க வேண்டும் எனவும் நாலக கொடுஹேவா குறிப்பிட்டுள்ளார். tamilwin

1 comment:

  1. சொல்வது நீங்கள். கேட்பது நாங்கள். தீர்மானிப்பது ராஜபக்ஷாக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.