Header Ads



நாட்டு மக்களிடம் பொலிஸார், விடுக்கும் முக்கிய கோரிக்கை


பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளளார்.

பொது மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் திடீர் விபத்துக்கள், அனர்த்தங்கள் பாரிய குற்ற செயல்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துவததற்காக 2004ஆம் ஆண்டு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொது மக்கள் தவறான முறையில் இந்த இலக்கத்தை பயன்படுத்திக் கொள்வதாக நீண்ட ஆய்வின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு பொலிஸ் அவசர இலக்கத்திற்கு 123272 அழைப்புகள் கிடைத்துள்ளது. அந்த எண்ணிக்கையை ஆராயும் போது பொலிஸ் அவசர இலக்கத்திற்கு நாள் ஒன்றுக்கு 3000க்கும் அதிக தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

எப்படியிருப்பினும் தினமும் பொலிஸ் அவசர இலக்கத்தினை தொடர்பு கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 8000க்கும் அதிகமான முறை முயற்சிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு வரும் அழைப்புகளில் 93 வீதமான அழைப்புகள் அடையாளங்களை உறுதிப்படுத்தாத அழைப்புகளாகும். இதனால் பொலிஸார் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகுகின்றனர்.

மக்கள் திடீர் விபத்துக்கள், பாரிய குற்ற செயல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற விடயங்களை அறிவிப்பதற்கு மாத்திரம் இந்த இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தவும். அவ்வாறு இன்றி காணி பிரச்சினை, ஒப்பந்த பிரச்சினை, காசோலை பிரச்சினை போன்ற விடயங்களுக்காக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைக்க வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.