Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரி, ரணில் மன்னிப்பு கேட்டனர் - குண்டுதாரிகளை மன்னிப்பது துரோகமாக அமையும்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக  மைத்திரிபால சிறிசேனவும் ரணில்விக்கிரமசிங்கவும் மன்னிப்பு கேட்டார்கள் -தாக்குதலில் சகோதாரர்களை இழந்தவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மைத்திரிபாலசிறிசேனவும் பிரதமராகயிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் என்னிடம் மன்னிப்பு கோரினார்கள் என இலங்கையில் தனது இரு சகோதாரர்களை இழந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிக்கி உயிரிழந்த அமெலி லின்சே டானியல் லின்சேயின் சகோதரர் டேவிட் லின்சே இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில மாதங்களின் பின்னர் நான் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்தவேளை அவர்கள் மன்னிப்பு கோரினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரிட்டன் பிரஜைகளான இருவரும் கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் தந்தையுடன் காலை உணவருந்திக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள்.

இதேவேளை தற்கொலை குண்டுதாரிகளை மன்னிப்பீர்களா என்ற கேள்விக்கு நான் இன்னமும் அதற்கு தயாராகயில்லை என டேவிட் லின்சே தெரிவித்துள்ளார்.

இன்னும் இல்லை தற்போது அவர்களை மன்னிப்பது துரோகமாக அமையும்  என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே தற்போது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Then President Maithripala Sirisena and Prime Minister Ranil Wickremesinghe had apologized to the brother of two tourists killed in the 2019 Easter Sunday attacks.

David Linsey, the brother of Amelie and Daniel Linsey told Daily Mirror that Sirisena and Wickremesinghe had apologized to him when he met them a few months after the attacks in Colombo.

This year marks two years since the deadly Easter Sunday attacks in Sri Lanka in which over 260 people were killed, including some tourists.

Among the tourists killed were Amelie and Daniel Linsey.  The dual UK and American citizens were having breakfast at the Shangri-La Hotel in Colombo with their father. Amelie and Daniel were killed in the bomb blast at the hotel.

Asked if he would ever forgive the bombers, David Linsey said not yet.

“Not yet. It would be a betrayal to forgive. For now,” he said.

He also said that the priority now has to be that actions are taken and that this kind of incident does not happen again. (Easwaran Rutnam)

No comments

Powered by Blogger.