Header Ads



கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு..! உற்பத்தி செய்யாமையே காரணம் என்கிறார் அமைச்சர்


சந்தைகளில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக புத்தாண்டு கால விருந்துபசாரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் அசௌகரிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

விநியோகிப்பதற்கு போதுமானளவு கோழி இறைச்சி கிடைக்காமையால், அதனை விற்பனை செய்யும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் Hiru செய்தி பிரிவு, கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவை தொடர்பு கொண்டு வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், இணங்கப்பட்டவாறு புத்தாண்டு காலப்பகுதியில் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே கோழி இறைச்சிக்கான தடுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலை தொடருமாயின், நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கோழி இறைச்சி தொடர்பான புதிய வரத்தமானியை வெளியிடும் நிலை ஏற்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.