Header Ads



பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின், உண்மையான நண்பனாக இருக்கிறது - இராணுவத் தளபதி மகிழ்ச்சி (வீடியோ)


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முகமது சாத் கட்டக், மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவரும், இலங்கை இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, 'ஷேக் ஹேண்ட்ஸ் - 1' எனும் பாகிஸ்தான்,இலங்கை இராணுவ கூட்டு களப் பயிற்சி  நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கொண்டு சிறப்பித்தனர்.

பாகிஸ்தான் இராணுவ வீரர்களுடன் 15 நாட்கள் நீடித்த கஜாபா ரெஜிமென்ட் தலைமையிலான ‘ஷேக் ஹேண்ட்ஸ் - 1’ கூட்டு கள பயிற்சி  கடந்த செவ்வாய்கிழமை (30) காலை சாலியபுராவில் உள்ள கஜாபா ரெஜிமென்ட் இராணுவ தளத்தில் நிறைவுற்றது.

பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 06 உயர் அதிகாரிகளும் 35 இராணுவ வீரர்களும் , இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 4 உயர் அதிகாரிகளும், 40 இராணுவ வீரர்களும்  இக்கூட்டு களப் பயிற்சியில் பங்கேற்றனர். இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதையும், பயங்கரவாதத்திற்கு எதிரான இரு படைகளின் அனுபவங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டதாக  இப்பயிற்சி காணப்பட்டது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில்  "பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருகிறது, மேலும், எச்சந்தர்ப்பத்திலும்  இலங்கைக்கு ஆதரவு அளிக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான  தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து பாகிஸ்தான் இலங்கையை ஆதரித்தது  குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில், இரு நாடுகளுக்கு  இடையிலான உறவை சுட்டிக்காட்டும் வகையில்  நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.



1 comment:

Powered by Blogger.