Header Ads



தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்புகின்றன, வைத்தியசாலைகளில் உள்ள ஒக்சிஜன் அளவை உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவு


நாட்டிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில், நோயாளர்கள் நிரம்பி வருகின்ற நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமை அடையும் அளவை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையோருக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் என கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் தற்போது 700 கட்டில்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் புதிதாக 70 கட்டில்கள், தீவிர சிகிச்சை பிரிவிற்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை செயற்படாத தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு புதிதாக ஊழியர்களை இணைந்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் கடமையாற்றுவதற்கான பயிற்சிகளை பெற்று, வேறு விடுதிகளில் சேவை புரியும் ஊழியர்களை அத்தியாவசிய தேவை நிமிர்த்தம், தீவிர சிகிச்சை பிரிவுகளில் கடமைகளில் ஈடுபடுத்துமாறு, வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன், உரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாகசுகாதார அமைச்சின் விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வைத்தியசாலைகளில் காணப்படும் ஒக்சிஜன் அளவை கணிப்பிட்டு, உடனடியாக அறிவிக்குமாறு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.