Header Ads



சிறுபிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்க - பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை


நாட்டில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள கோவிட் தொற்று பரவல் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார அலுவலகம் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும், மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்ளவதற்கு இடமளிக்காமல்ல வீட்டிலேயே பிள்ளைகளை வைத்திருக்குமாறு விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேடமாக முடிந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கைகளை சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும், வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக் கவசம் அணி வேண்டும் என பெற்றோர் பிள்ளைகளுக்கு கூற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

No comments

Powered by Blogger.