Header Ads



எதிர்க் கட்சி அலுவலக ஊடக சந்திப்பில், லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்துக்கள்


இன்று(19) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்துக்கள்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் என்ற ஒன்றை அவசர அவசரமாக கடந்த 8ஆம் திகதி சபை முதல்வரால் பாராளுமன்த்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்தைய தினம் இடம் பெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலோ அல்லது பாராளுமன்ற நியாய சபைகளிலோ எத்தகைய சமர்ப்பிப்புகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் அப்பால் திடீரென சமர்ப்பிக்கப்பட்டது.  காலக்கேடாக 15 ஆம் திகதி குறிக்கப்பட்டிருந்தது. இதில் ஐந்து நாட்கள் புத்தாண்டையொட்டிய விடுமுறை நாட்களாகும்.நீதிமன்ற விடுமுறை தினங்களாகும்.இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்குள்ள அவகாசம் வெறுமனே 2 நாட்களே வழங்கப்பட்டிருந்தன. இது அரசாங்கம் திட்டமிட்டே இவ்வாறு மேற்கொண்டுள்ளது. அவசர அவசரமாக சமர்ப்பிக்க முற்பட்டதிலிருந்து அதிலுள்ள பல விடயங்களை மறைத்து துரிதமாக அங்கீகாரங்களை பெற முயற்சித்த விடயம் புலப்டுகிறது. 

பாராளுமன்றத்தில் இது குறித்து எந்த விடயங்களும் கலந்துரையாடப்படவில்லை. கலந்துரையாடல்கள் இன்றி திடீரென சமர்ப்பிக்கப்பட்டதால் பல முரண்பாடான நிலைப்பாடுகள் வெளிப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழுச் சட்டமூலத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு பெறுப்புக் கூறும் நிதியதிகாரம் விடிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் எத்தகைய உள்ளக கணக்காய்வுகள் இருந்தாலும் அன்மையில் வெளிவந்த பினை முறி மேசடி மற்றும் சீனி மேசடிகள் பாராளுமன்ற கோப் மற்றும் கோபா குழுக்கள் மூலமே நாட்டிற்கு வெளிப்பட்டது. இத்தகைய பாராளுமன்றத்திற்கு பெறுப்புக

 கூறும் நிதியதிகாரத்திலிருந்து விடுக்கப்பட்டமை அங்கீகரிக்க முடியாத ஓர் விடயமாகும்.ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது. இன்று அதன் நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. 

அரசாங்கம் திடீரென சமர்ப்பித்த கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் தொடர்பாக பின்வரும் விடயங்களை கவனத்திற்கு கொண்டு வந்தார். 

01. கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக பாராளுமன்ற கோப் மற்றும் கோபாக் குழுக்களுக்கு வருடாந்த நிதி கணக்காய்வு விடயத்தை ஆணைக்குழுச் சட்ட மூலம் உள்ளீர்க்க வேண்டும். 

02. பாராளுமன்ற கண்கானிப்பின் கீழ் கொழும்பு துறை முக நகரத்தை கொண்டு வரல்.

03. பண பறிமாற்றல் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்ற ஷரத்து இணைக்கப்பட வேண்டும்.

04.பயங்கரவாதத்துடன் தொடர்பான வியாபாரங்கள் கொழும்பு துறை முக நகருக்குள் இடம் பெறக் கூடாது என்ற ஷரத்து இணைக்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு திடீரென இந்த ஆணைக்குழுச் சட்டத்தை சமர்ப்பித்ததிலிருந்து அரசாங்கம் மீண்டும் பெய்ல் என்பதையே நிரூபிக்கிறது.இளைஞர் யுவதிகளுக்கு பல இலட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்ற போர்வையில் சீனாவிற்கு விற்கும் நிலைப்பாட்டையே இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது. இவ்வாறு எத்தகைய கலந்துரையாடல்களுமின்றிய சட்ட மூலமென்றை தென்னாபிரிக்கா சமர்ப்பித்த போது அந் நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்டை துறை முகம் இரண்டிலிருந்தும் இலாபம் கிடைக்கப்பெறுவது இன்னும் 25 வருடங்களுக்கு பிறகே ஆகும். அவ்வாறு இருக்கும் போது தொழில் வாய்ப்பு உருவாக்கம் பற்றி பிழையான கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சுயாதீனம் இறுமையைப் பாதுகாத்த வன்னம் எமது நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச பிராந்திய வல்லரசுகளுடன் உறவுகளை பேனியுள்ளனர். அமெரிக்கா,இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்ய போன்ற நாடுகளிலிருந்து உதவிகளைப் பெற்றுள்ளனர்.ஆனால் இன்று சீனா கேட்கும் சகலதையும் வழங்கும் நிலையை வேறு எந்த ஆட்சியாளர்களும் இதற்கு முன்னர் செயற்படுத்தவில்லை என மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.