Header Ads



முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாமென, நாம் உண்மையான முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்


நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற  தீவிரவாதிகளும் தற்கொலைதாரிகளும் சமூகத்தில் உலாவுகின்றனர்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எளிதாக நினைக்காது நாடு எதிர் கொள்ளப்போகும் பேரழிவிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் இரண்டு வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஆயர் பேரவை முக்கியஸ்தர்களான சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேருட்திரு வெலன்ஸ் மென்டிஸ், காலி மறைமாவட்ட ஆயர் பேருட்திரு ரேமண்ட் விக்ரமசிங்க,அருட்பணி சிறில் காமினி அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள், முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளை வைத்து நாம் அந்த குற்றச்சாட்டை சாதாரண முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப் போவதில்லை. சிறு தரப்பினரே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்கள் பலநூறு வருடங்களாக சிங்கள, தமிழ் மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை நாம் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டோம்.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவர்களில் சிறு தரப்பினர் இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையான முஸ்லிம் மத அடிப்படையை தவிர்த்து அடிப்படைவாதிகளாக செயற்படுபவர்கள்.

அவ்வாறானவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென நாம் உண்மையான முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்

லோரன்ஸ் செல்வநாயகம்

3 comments:

  1. Ok thanks now u should file closed.

    ReplyDelete
  2. முஸ்லீங்களுக்கும் அவர்களை அடையாளம் காணமுடியாமல் இருக்கிறதே. மனஅழுத்தம் உள்ளவர்களே அநேகமாக தீவிரவாத விடயங்களில் ஈடுபடுவார்கள். மன அழுத்தமுள்ளவர்களை தமது தேவைகளுக்காக அரசியல்வாதிகளும், பொருளாதாரவாதிகளும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அரச நிருவாக முறையில் ஓட்டை இல்லையென்றால் இவர்களைக்கண்டுபிடிப்பதில் சிக்கலில்லை. அரச நிருவாகம் அவர்களின் தேவைக்காக கால் புண் ஆறாமல் பார்த்துக்ககொள்கின்றனர். அதற்கு இந்த மனஅழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயாக உள்ளனர்.

    ReplyDelete
  3. extremists r in all community not only in muslims but also in christians specially buddists

    ReplyDelete

Powered by Blogger.