Header Ads



ஒலிபெருக்கியும், மஸ்ஜித்களும் - கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்


இன்றைய காலத்தில் ஒலிபெருக்கிகளே பல வழிகளிலும் மஸ்ஜித்களின் பணிகளுக்கு உதவி வருகின்றன. பாங்கு சொல்லுதல், ஜமாஆத்தார்களுக்கான முக்கிய அறிவித்தல்களைச் செய்தல், பயான் சொற்பொழிவுகள், வெள்ளிக் கிழமை ஜும்ஆ பிரசங்கம், விஷேட நிகழ்வுகளின் போது பாவித்தல், அண்மைக் காலம் முதல் ஐவேளைத் தொழுகைகளைச் செய்து வரல் என இது போன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒலிபெருக்கியை மஸ்ஜித்கள் பாவிக்கின்றன. இவற்றில் சில சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகளும், பாவிக்கப் படுகின்றன. இவற்றால் மஸ்ஜித்தை அண்டி வாழும் பொதுமக்கள் சத்த மிகுதியால் (over sound) பாதிக்கப் படுவதாக அறிய முடிகிறது. இலங்கையில் ஒலி மாசடைதல் சட்டமும் (sound pollution law) நடைமுறையில் உள்ளது. மனிதர்களின் இயற்கையான வாழ்வுக்குத் தடங்கல் ஏற்படும் வண்ணம் யாரும் ஒலியை எழுப்ப முடியாது என இச் சட்டம் வலியுறுத்துகிறது. குறிப்பாக மத நிறுவனங்கள் எழுப்பும் ஒலி பற்றியே அந்த சட்டம் பிரஸ்தாபிக்கிறது.

மஸ்ஜித்களை முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஏனைய மத சகோதரர்களும் நேசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். முஸ்லிம்களைப் பொறுத்த வரை மஸ்ஜித்தை அண்டிதாக தங்கள் வீடுகளை அமைத்து வாழ்வதை ஒரு கௌரவமாகக் கருதுகிறார்கள். 

ஒலிபெருக்கியை மஸ்ஜித்கள் பாவிப்பதால் அண்டை அயலவர்கள் பல அசௌகரியங்களை அனுபவிப்பதை உணர்கிறார்கள். இந்த நேரத்தில் ஒலிபெருக்கி பாவனை விடயத்தில் பள்ளி வாசல் நிருவாகிகள் சில நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். ஒலிபெருக்கியின் சத்தம் அதிகரித்துக் காதுகளைப் பதம் பார்ப்பதால் மஸ்ஜித் தானே என்று பொது மக்கள் எல்லோரும் சும்மா இருந்து விட மாட்டார்கள். நோயாளிகள், வயோதிபர், சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள் எனப். பலரும் இருக்கும் வீடுகளைப் பற்றி மஸ்ஜித் நிருவாகிகள் யோசிக்க வேண்டும். இவை பற்றி முறைப்பாடுகள் பதிவாகும் பட்சத்தில் அது நமது எல்லா மஸ்ஜித்களையுமே பாதித்து விடும் அபாயம் இருக்கிறது. 

ஒரு வகையில் இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கும், அவர்களின் மத கிரியைகளுக்கும் ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு பொறுப்பிலுள்ள முஸ்லிம் மத, சமூகத் தலைமைகளும் கூட காரணமாக உள்ளதாகவும் குற்றச் சாட்டுக்கள் உண்டு. நமக்குள் தீர்க்கப் பட வேண்டிய பல பிரச்சினைகளை நமது தலைமைகள் கண்டு கொள்ளாமையாலேயே அவை வேறு மூன்றாம் தரப்பை நாடி விபரீதமாக மாறி வருகின்றன. எனவே இவை பற்றி உரிய பொறுப்புதாரிகள் கவனம் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

நௌபீர் ஆதம் லெவ்வை

7 comments:

  1. This article is more applicable to area where where Muslims living mixed with non Muslims, such as cities and towns.

    But when it comes to Muslim villages, hope it should be fine. Yet having good voice and moderate sound should be welcome.

    ReplyDelete

  2. எழுத்தாளர் கூறியிருப்பது உண்மைதான். இதற்கு ஒரு மாற்றுவழியும் உள்ளது. பள்ளி மஹல்லா எல்லைவரை கேட்கக்கூடியதாக ஒலிபெருக்கியின் சப்தத்தை கட்டுப்படுத்திவிட்டால் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். முஸ்லிம்களின் சமூகக் கட்டமைப்பு சிதைவடைவதற்கு பல்வேறு ஜமாஅத் அமைப்புகள் இருந்து வருகின்றமையும் காரணமாகும். உலமாக்களுக்குள் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு ஜமாஅத்தினரும் விரும்பத்தகாத கொள்ளைகளை பின்பற்றுமாறு மக்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பல சந்தர்ப்பங்களில் தேவையற்ற கைகலப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களும் பிரிக்கப்பட்டுவிட்டனர். இதனைப்பற்றி உலமாக்களும் சமூகத்தின் புத்திஜீவிகளும் கவனமாகச் சிந்தித்து சுமுகமான முடிவொன்றிற்கு வர வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த அரசாங்கம் பௌத்த இந்து கத்தோலிக்க மதக் கொள்கைகளில் தலையிடவில்லை. ஆயினும் இஸ்லாம் சமபந்தப்கபட்ட விடயங்களில் பெரும் நெருக்குவாரங்களைத் தந்து கொண்டிருக்கின்றது. இதற்கான காரணங்கரைளயும் ஆராய வேண்டியது மிக முக்கியமானதாகும்.

    ReplyDelete
  3. மிக ஆரோக்கியமான விவாதம். முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அனைத்து சமய நிறுவனங்களுக்கும் பொதுவான கோரிக்கையாக இதனை நான் முன்மொழிகிறேன்.

    ReplyDelete
  4. கிழக்குப் பகுதிகளிலேயே இவை அதிகமாக செயற்படுத்தப்படுகின்றன. எனவே, மஸ்ஜித்களில் ஒலிபெருக்கியில் அதான் ஒலிப்பதை தவிர ஏனைய அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு அது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

    ReplyDelete
  5. பள்ளிக்கு மிக அண்மையில் மாத்திரம் கேட்கும் அளவுக்கு ஒலியை மிகவும் குறைத்துவைக்கலாம்.குறிப்பாக ஒலிபெருக்கிகள் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்துக்குத் தடையாக அமைந்தால் அந்த ஒலிபெருக்கிகளை அகற்றிவிடுவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது.

    ReplyDelete
  6. Over acting news. When we compare with DAILY BANA EVENING AND MORNING in majority muslims areas the speaker of masjid is nothing. First they have to stop that annoying shout....

    ReplyDelete
  7. எதுவும் அளவுக்கு மிஞ்சினால்

    ReplyDelete

Powered by Blogger.