Header Ads



அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன - அலி சப்ரி


பேச்சு கருத்து  சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சிலகுழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தவறான தகவல்கள், பொது மக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான  சட்டசீர்திருத்தங்களை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Mr shabry malayasia singapore not a recism govt.aldo that govt giving fully facility life for the people.So your govt should take care of the public first.

    ReplyDelete
  2. பேச்சு கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை முஸ்லிம் சமூகம் முழுமையாக உணர வேண்டும்.
    ஜனாதிபதி கூறியது - "அவருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பொய்கள் பரப்பப்படுகின்றன" என்பது மிகவும் உண்மை. ஒரு அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் தொடர்பு ஆய்வாளர் என்ற முறையில், இலங்கையின் தற்போதைய சமூக மற்றும் அரசியல் போக்கு குறித்து ஒரு நிபுணராக என் அறிவைப் புதுப்பிக்க
    அனைத்து சமூக ஊடக செய்தி வெளியீடுகளையும் ஆங்கிலத்திலும் குறிப்பாக தமிழிலும் தினமும் உலாவுகிறேன். எல்லா தமிழ் மற்றும் சிங்கள யூடியூப் சேனல்களையும் நான் பார்க்கிறேன்.Samugam News channel, TubeTamil News, Tamilan24, IBC TamilTV, BBC Tamil News, Jaffna Tamil TV, Tamilwin.com, lankasri.com , Seithy.com and Akilan.com (new youtube channel) போன்ற தமிழ் யூடியூப் சேனல்கள் தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் அவரையும் அரசாங்கதையும்பற்றிய தவறான செய்திகளை தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழ் சமூகம் / தமிழ் பேசும் மக்களுக்கு கப்பலில் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழ் சமூகம் / தமிழ் பேசும் மக்களுக்கு ஒளிபரப்பு செய்கிறார்கள். இந்த பொய்யான செய்திகள் / மீடியாவைத் தடுப்பதற்கான சட்டத்திற்கு இணங்க, இந்த செயல்பாட்டாளர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கருத்து ஏற்கனவே http://www.adaderana.lk/news/72805/falsehoods-circulated-against-me-govt-in-organized-manner-president இல் வெளியிடப்பட்டுள்ளது.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete
  3. இவர் புலியின் வாலைப் பிடித்துக் கொண்டு தடுமாறுகின்றாரா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

    ReplyDelete
  4. ஒரு இணத்தை குறிவைத்து பொய் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களையும் தடுக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.