Header Ads



அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வேரறுக்க, அரசாங்கத்துக்கு உதவுமாறு கோரிக்கை


உயிர்த்த_ஞாயிறு_தாக்குதல்களுக்கு_பொறுப்பானவர்களை_கைது_செய்து_நீதியை_உறுதி_செய்யவும்; இலங்கை முஸ்லிம் கவுன்சில் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் 

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பொறுப்பான அனைவரையும்  கைது செய்வதன் மூலம் நீதியை உறுதி செய்யுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு அனைத்து கிறிஸ்வர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் மேலும் தெரிவித்துள்ளதாவது; 

'2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமுற்ற எங்கள் அப்பாவி சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நாம் நினைவுகூருகிறோம்.

மேலும் அனைத்து முஸ்லிம்களையும் சக இலங்கையர்களையும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வேரறுக்க அரசாங்கத்துக்கு உதவுமாறும்  அவர்கள் கேட்டுக்கொண்டதுடன் இதனால் இலங்கையில் அமைதியான சகவாழ்வை அடைய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தினக்குரல்

1 comment:

  1. இந்த நாட்டில் பொதுமக்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் சம்பந்தமில்லை. பயங்கரவாதத்தை உருவாக்குபவர்கள் கண்டறியப்பட்டு அது கட்டுப்படுத்தப்படாவிட்டால் அதைக்கட்டுப்படுத்த வேறுவழிகள் இல்லை. நோய் கண்டறியாது நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை. ஆட்சியாளர்கள் சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக இருக்கின்றனர். ஆனால் நோய் எவ்வாறு ஏற்பட்டது அதன் மூலம் என்ன என்பது பற்றி எந்த அக்கறையும் இன்றி நோயை குணப்படுத்த முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.