April 10, 2021

பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள் - சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி, நாடு பூராக உணவு தவிர்ப்பு போராட்டம்அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி நாடு பூராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு சச்சிதானந்தம் ஏற்பாட்டிலேயே இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று -10- காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை முதல் மாலை வரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மத மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள். அத்தோடு சைவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும், இல்லாவிட்டால் இரண்டு மதங்களும் மதமாற்றிகளால் மாற்றப்பட்டுவிடும்.

குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதமாற்றிகளின் செயற்பாடு அதிகரித்து காணப்படுகின்றது. அதேபோல் இந்து மக்கள் பசுவினை கோமாதா என வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள் அதனையும் நிறுத்த கோருகின்றோம்.

அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள். ஆனால் இலங்கை ஒரு சோலைவனம் இங்கே மாடுகளை கோமாதாவாக வணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும். எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

9 கருத்துரைகள்:

சாகப்போகும் வயதில் இந்த கிழட்டு ஜடம் நிறைவேற முடியாத ஆசைகளைப்பாற்றி கனவு காண்கின்றான்

Thanks to you and all the credits goes to Sivasena

அத்தோடு நானும் மகா கனம் பொருந்திய சச்சுதானந்தம் ஐயாஇ மாமேதை அவரகளின் கருத்துக்கு மேலதிகமாக ஒன்றையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மாட்டின் சிறுநீரை (மூத்திரம்) சச்சுதானந்தம் ஐயா அவரகளின் சிறுநீருடன் கலந்து குளிர்பெட்டியில் வைதது பருகினால் புற்று நோய், காச நோய், VD நோய் போன்றவை பெருகுவதைத் தடுக்க முடியும.. எனவே அதிசிறந்த வியாபாரத்திற்கு இந்த சிறுநீர்க்கலவையினை தயரிப்பதற்கு வைத்தியன் சச்சிதானந்தம் அவரகளின் தலைமையில் ஆணைக்குழுவினை நியமித்தாலும் அது மிகவும் நல்லது.

சச்சி அண்ணா, என்ன இது நீங்கள்தானா? முன்னர் நீங்கள் கற்பித்த சர்வ இன மத சமரசம் என்ன? நீங்கள் இப்போ செய்கிற மதவெறி காரியங்கள் என்ன? நம்ப முடியவில்லை. விட்டுவிடுங்கள் இந்த விபரீத விழையாட்டை.
*
அண்ணா உங்களை ஒரு ஐநா கடல் மீன் வளத்துறை ஆலோசகராகவும் உயிரியல் விஞானியாகவும் காந்தீய வாதியாகவும் சர்வ மத நல்லிணக்கத்துக்கு சேவை செய்பவராகவும் ஈழத்து படைப்பாளர்களை ஊக்குவிக்கும் காந்தளகம் பதிப்பாளராகவுமே மீண்டும் பார்க்க விரும்புகிறோம்.
*
என்ன இது அண்ணா, திடீரென நீங்கள் உங்கள் கடந்த கால காந்தியம் சார் சர்வ மத நல்லிணக செயற்பாடுகளையும் போதனைகலையும் இப்படிக் கொச்சைப் படுத்தலாமா? கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான உங்கள் புதிய நிலைபாடு அடிப்படையில் தமிழர்களை மதரீதியாகப் பிழவுபடுத்தும் தமிழ்பேசும் மக்களை மோதவைக்கும். சான்றோனாக இருந்த நீங்கள் உங்கள் புதிய மனுக்குல விரோத நிலைபாட்டை உடனடியாக கைவிடுங்கள்..

Pl do comments with good words

Saahumpothum thontharavu makkalaukku... ithaitthhaan solvaargal, tharittiram puditta erumaigal endu

பாலைவனங்களில் ஒட்டகம் தான் இருக்கும். மாடுகள் இருக்காது என்று இந்த எருமைக்கு தெரியாது 

நீ மட்டும் சாகமல் இளமையுடனா என்றும் வாழப் போகிறாய் விலங்கு தின்னிப் பயலே. பன்றி தின்கிறாயா

Post a Comment