Header Ads

மோட்டார் சைக்கிள், ஆட்டோ திருட்டுகள் அதிகரிப்பு - பொலிஸார் எச்சரிக்கை

சன நெரிசலான பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளை நிறுத்தி வைக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் நேற்று (04) 04 மோட்டார் சைக்கிள்களும் 03 முச்சக்கரவண்டிகளும் திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தில் வாகனத் திருட்டுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, பாதுகாப்பான இடங்களில் மாத்திரம் வாகனங்களை நிறுத்தி வைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சன நெரிசலான பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளை நிறுத்தி வைக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் நேற்று (04) 04 மோட்டார் சைக்கிள்களும் 03 முச்சக்கரவண்டிகளும் திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தில் வாகனத் திருட்டுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, பாதுகாப்பான இடங்களில் மாத்திரம் வாகனங்களை நிறுத்தி வைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.