Header Ads



விலை கூடிய போன்களை குறைந்த விலையில் விற்பதாக கூறி, பணத்தை பெற்றபின் நுகர்வோருக்கு அதனனை வழங்காத நிலையம் சுற்றிவளைப்பு


கொள்ளுப்பிட்டி பகுதியில் நிதி மோசடி செய்து நடத்திச் செல்லப்பட்டிருந்த, கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின்படி நேற்றைய தினம் -06- முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்புக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விற்பனை நிலையத்தை நடத்திச் சென்றவர்கள், அதிக விலையுடன் கூடிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி பணத்தினை பெற்றுக்கொண்டு நுகர்வோருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

பணம் அறவிடப்பட்டு 20 நாட்களுக்குப் பின்னர் கையடக்க தொலைபேசி வழங்கப்படும் என்ற நிபந்தனையின் கீழ் நுகர்வோரிடம் பணம் பெறப்பட்டுள்ளது.

எனினும் பணம் வழங்கி 20 நாட்கள் கடந்த பின்னரும் தமக்கு கையடக்க தொலைபேசிகள் வழங்கப்படவில்லை என பலர், நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளில், குறித்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தி சென்றவர்களின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யாமல் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் நடத்திச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.